பக்கம்:விசிறி வாழை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதின்மூன்று 127

கொண்டிருந்தபோது சேதுபதி எதுவுமே பேசவில்லை. காமாட்சி கேட்ட கேள்வி அவர் உள்ளத்தை உறுத்திக் கொண்டிருந்தது. என்ன அண்ணு உனக்கு?’’ என்று கேட்டபோது ஒன்றுமில்லே’ என்று அவளிடம் மழுப்பிவிட் டேன். ஆனல் உண்மையாகவே எனக்கு ஒன்றுமில்லயா? என் உள்ளத்தில் உறுத்திக் கொண்டிருக்கும் எண்ணத்தை அவளிடம் விளையாட்டாகச் சொல்லிப் பார்க்கலாமே.” என்று தோன்றியது.

மெளனமாகவே சாப்பாட்டை முடித்துக்கொண்டு ஹாலில் போய் அமர்ந்தவர் சாவகாசமாகத் தட்டிலிருந்த பாக்கையும் வெற்றிலேயையும் எடுத்துப் போட்டபடியே கோமாட்சி!...” என்று அழைத்தார்.

காமாட்சி எதிரில் வந்து நின்றதும், ‘இப்படி உட் கார்ந்து கொள்ள சற்று நேரம் உன்னிடம் தாமாஷாகப் பேசிக் கொண்டிருக்கப் போகிறேன்...” என்று எதிரிலிருந்த சோபாவைச் சுட்டிக் காட்டினர்.

சேதுபதியின் பேச்சும் போக்கும் காமாட்சிக்கு வியப்பை அளித்தன. அண்ணுவா இப்படிப் பேசுகிறார்?’ என்று எண்ணிக் கொண்டவள் தமாஷாக்கும் வேடிக்கைக்கும்கூட உனக்கு அவகாசம் இருக்கிறதா, அண்ணு!’ என்று கேட்ட படியே நாற்காலியில் அமர்ந்தாள்.

சோபாவில் உட்கார்ந்திருந்த காமாட்சியைப் பார்த்து சேதுபதி திடீரென்று கேட்டார்.

‘காமாட்சி! இப்போது எனக்கு என்ன வயசிருக்கும்?” ‘என்னைவிட நாலு வயசுகூட இருக்கும். ஏன் அண்ணு திடீரென்று இப்போது வயசைப்பற்றி என்ன கவலே வந்து விட்டது உனக்கு?’’ -

‘ஒன்றுமில்லை; சும்மாத்தான் கேட்டேன். இப்போது உனக்கு என்ன வயசு?” .”

“நாற்பத்தெட்டு.” - ‘உன்னைவிட நாலு வயசு கூட என்றால்......எனக்கு இப்போ ஐம்பத்திரண்டுதானே?

    • ஆமாம்...’ “எனக்கு ரொம்ப வயசுாகிவிட்டது. இல்லையா?"
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/131&oldid=686982" இலிருந்து மீள்விக்கப்பட்டது