பக்கம்:விசிறி வாழை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதின்ைகு 189

மெளனத்திலாழ்ந்திருந்த பார்வதி, ஏதோ பேசுவதற்குத் தயங்கிக் கொண்டிருக்கிருள் என்பதைக் குறிப்பால் அறிந்த வேதாந்தம், “ஏதேனும் முக்கிய விஷயமிருந்தால் தயங்கா மல் கூறுங்கள்’ என்றார்.

“தாங்கள் இந்தக் கடிதத்தைப் படித்துப் பார்க்கவேண் டும். இந்த அற்ப விஷயத்தில் தங்களுக்குத் தொந்தரவு கொடுப்பதற்காக மன்னிக்க வேண்டும்’ என்ற பூர்வ பீடிகை யுடன் கடிதத்தை எடுத்துக் கொடுத்தாள் பார்வதி.

அதைப் பிரித்துப் பார்த்த வேதாந்தம், “இதையா அற்ப விஷயம் என்று கூறினரீர்கள்? இது நம் இரு கல்லூரியை யுமே பாதிக்கும் விஷயமல்லவா? இம்மாதிரி விஷயங்களில் நாம் அலட்சியமாக இருந்துவிட்டால் கடைசியில் அது நம் கல்லூரிகளுக்கே இழுக்கைத் தேடித் தரும். கல்லூரித் தலைவர்களுக்கு இவை சம்பந்தமற்றவை என்று உதாசீனம் செய்துவிடுவது மிகமிகத் தவருன செயல். இது விஷயத்தில் தாங்கள் எடுத்துக்கொண்ட அக்கறையைப் பாராட்டு கிறேன். இப்போதே கோபாலன அழைத்துப் பேசி உண்மையை அறிந்துகொண்டு விடுவோம். சற்று நேரம் தாங்கள் இந்த அறையிலேயே உட்கார்ந்திருங்கள். தங்களே நேரில் வைத்துக்கொண்டு அவனை விசாரிப்பது அவ்வளவு சரியாக இருக்காது. அவன் என்ன கூறுகிருன் என்பதைத் தாங்களும் கேட்க வேண்டும். ஆகையால், நான் அவனே அடுத்த அறைக்கு வரச்சொல்லி விசாரணை செய்கிறேன். இந்த அறையிலிருந்தபடியே தாங்கள் கேட்டுக் கொள்ள லாம்’ என்றார்,

தலையசைத்தாள் பார்வதி. அடுத்த அறையில் விசாரணை ஆரம்பமாயிற்று.

‘கோபால் உன்னிடம் இன்று சில கேள்விகள் கேட்கப் போகிறேன். எதையும் மறைக்காமல் பதில் கூறவேண்டும். இப்படி உட்கார்ந்து கொள்’ என்றார் வேதாந்தம்.

கோபாலன் உட்காரவில்லை. மன்னிக்க வேண்டும்!’’ என்று கூறித் தன் பண்பை வெளிப்படுத்தின்ை.

‘உனக்கு என்ன வயதாகிறது கோபால்?’’ ‘'இருபத்து மூன்று...??

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/143&oldid=686995" இலிருந்து மீள்விக்கப்பட்டது