பக்கம்:விசிறி வாழை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f76 விசிறி வாழை

அேப்புறம்!...” - *அப்புறம் என்னிடம் கலியானப் பேச்சே எடுப்பதில்லே. எப்போதாவது பேசிலுைம் பொதுவாகப் பேசி விட்டுப் போய் விடுவான். யாரைப்பற்றியும் அதிகம் பேசமாட்டான். ஆனல் உங்க கல்லூரியைப்பற்றியும் உங்களைப்பற்றியும் பேச ஆரம்பித்து விட்டால் மணிக் கணக்கில் பேசிக்கொண் டிருப்பான்...”

இதைக் கேட்டபோது பார்வதியின் இதயம் மகிழ்ச்சியில் திகனத்தது.

“அப்படியா!...அவர் வாயால் புகழக் கூடிய அளவுக்கு நான் என்ன செய்துவிட்டேன்?’ சேதுபதி தன் மீது அன வற்ற அன்பு கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த பிறகு பார்வதியின் உள்ளத்தில் திம்மதி பிறந்தது. அந்த நிம்மதி புடன் மன அமைதியுடன் அன்றிரவு தூங்கி எழுந்தான் பார்வதி.

மறுநாள் கால, பார்வதி கட்டிலில் படுத்தபடியே சிந்தித்துக் கொண்டிருந்தாள். வீட்டில் உள்ள ஜன்னல் களையும் கதவுகளையும் என்னதான் மூடி வைத்தாலும் காற்று உள்ளே வராமல் இருக்கிறதா? மனத்தை எவ்வளவு உறுதிப் படுத்திக் கொண்டாலும் பலவீனமான சிந்தனைகள் வந்து கொண்டுதாணிருக்கின்றன.

அவரை மறந்துவிட அவள் எவ்வளவோ முயன்றுதான் பார்த்தாள். ஆல்ை முடியவில்லே. பூவின் நிறத்தையும் அழகையும் எளிதில் மறந்துவிடலாம். ஆனல் அதனுடைய மணத்தை மறக்க முடிவதில்லையே!

‘அம்மா, கல்லூரியிலிருந்து ஏழெட்டுப் பேர் வந்திருக் கிருள்கள் தங்களைப் பார்க்க வேண்டுமாம்...கீழே வராந்தா வில் காத்திருக்கிறார்கள்’’ என்று சொல்லிக் கொண்டே வந்தாள் ஞானம்.

  • மாணவிகள் மட்டுமா, புரொபஸர்களும் கூடவா?’’ என்று கேட்டாள் பார்வதி. -
  • அதெல்லாம் எனக்குத் தெரியவில்லை’ என்றாள் ஞானம. - - - -

பார்வதியின் நெற்றியில் சுருக்கம் கண்டது. *சரி; நீ போய் அவர்களை மேலே வரச் சொல்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/180&oldid=687042" இலிருந்து மீள்விக்கப்பட்டது