பக்கம்:விசிறி வாழை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 - விசிறி வாழை

எனக்கும் திருமணம் நடந்தது. பின்னர், சரஸ்வதியின் மூல மாகப் பார்வதியைப்பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டேன். அவளுடைய அன்பிலும் ஆதரவிலும் அப்போது வளர்ந்து கொண்டிருந்த குழந்தை வேறு யாரு மல்ல. அவளுடைய அண்ணன் மகன் ராஜாவேதான் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

அன்று முதல், பார்வதியின் எதிர்கால வாழ்வுக்கு இடை ஆறு செய்துவிட்ட பெரும் குற்றம் என் உள்ளத்தை அரித்து கொண்டேயிருந்தது. அந்தக் குற்றத்துக்குப் பிராயச் சித்தமாக ஏதேனும் ஒருவகையில், என்றாவது ஒருநாள், ஏதாவது ஒன்றைச் செய்துவிட வேண்டுமெனச் சந்தர்ப் பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தச் சந்தர்ப் பத்தை ஆண்டவன் எனக்கு இப்போதுதான் ஏற்படுத்திக் கொடுத்தார். பாரதியை ராஜாவுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவள் வெளியிட்ட போது நான் சற்றும் யோசிக்காமல், தயங்காமல், தாமதிக் காமல் சட்டென ஆகட்டும் என்று பதில் கூறியதற்கு இதுவே காரணம்.”

சேதுபதி பேச்சை முடித்தார். இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த பார்வதி, ஒகோ, பெண் பார்க்க வந்த விஷயத்தை இவர் இன்னமும் ஞாபகம் வைத்துக் கொண் டிருக்கிருரா? மறந்துவிட்டார் என்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன்?’ என்று தனக்குள் வியந்துகொண்டாள்.

‘நான் வருகிறேன் காமாட்சி! நேரமாகிறது... பாரதியை எங்கே காணுேம்?’ சேதுபதி விசாரித்தபடியே புறப்பட்டார். - -

“அவளும் ஞானமும் கீழே படுத்திருக்கிறார்கள்அண்ணு! ராஜா வெளியே போயிருக்கிருன். அவனுடைய நண்பர் களெல்லாம் சேர்ந்துகொண்டு அவனுக்கு டீ பார்ட்டி’ வைத்திருக்கிறார்களாம்.’’

“அப்படியா? சேதுபதி கீழே இறங்கிப் போய் விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/222&oldid=689507" இலிருந்து மீள்விக்கப்பட்டது