பக்கம்:விசிறி வாழை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை

“ஒரு கதை சொல்கிறேன், கேட்கிறீர்களா? உற்சாக மாகப் பேச்சைத் தொடங்கினர் நண்பர்.

‘சொல்லுங்கள்’ என்று நானும் ஆர்வத்துடன் கதை கேட்கத் தயாரானேன்.

‘நான் கூறப்போவது ஒரு புதுமையான காதல் நவீனம். மற்றக் காதல் கதைகளோடு இதை ஒப்பிட முடியாது. இது ஒரு தனித்தன்மை வாய்ந்த கதை. இதில் வரும் கதாநாய கிக்குக் கிட்டத்தட்ட நாற்பத்தெட்டு வயதாகிறது. கதா நாயகருக்கு அவளைக் காட்டிலும் ஏழெட்டு வயது கூட இருக் கும். ஒருவரை ஒருவர் அந்தரங்கமாக நேசிக்கிறார்கள். அதன் விளைவாக மனப் போராட்டங்களுக்கும் கொந்தளிப்புகளுக் கும் ஆளாகிறார்கள். இறுதியில் கதாநாயகி இறந்து விடுகிருள். அவர்களிடையே தோன்றும் உணர்வு, அதைக் காதல் என்றே கூறலாம்-அமரத்துவம் பெற்று விடுகிறது. இதுதான் கதை, எப்படி இருக்கிறது?’ என்று கேட்டார்.

மிேகச் சிறந்த கதை’ என்று பதில் கூறிவிட்டுக் கதை யைப்பற்றிய சிந்தனையில் மூழ்கிவிட்டேன் நான்.

கதை சொன்னது யார் தெரியுமா? கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளைக் கதா பாத் திரங்களாகக் கொண்டு தொடர் கதைகள் எழுதுவதில் வல்ல மையும் புகழும் பெற்றுள்ள சேவற்கொடியோன் தான், காதலுக்குரிய வயதைக் கடந்துவிட்ட கதாபாத்திரங்களே வைத்துக்கொண்டு இவர் கதை எழுத முற்படுவானேன்? சந்தேகம் ஏற்பட்டது. ஆயினும் அதை உடனேயே சொல்லி விட விருப்பமின்றி, மிக உயர்ந்த கதை எழுதுவதற்கு மிகுந்த ஆற்றலும் அனுபவமும் வேண்டும்’ என்றேன்.

  • இந்தக் கதையை நான் எழுதுவதாக உத்தேசமில்லை. அதற்கு வேண்டிய அனுபவமோ ஆற்றலோ என்னிடம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/230&oldid=689516" இலிருந்து மீள்விக்கப்பட்டது