பக்கம்:விசிறி வாழை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 விசிறி வாழை

குள் போவதற்குள் லேசாக நனைந்து விட்டாள். நெஞ்சு பட படக்க அவள் உள்ளே செல்லும்போதே அப்பா அவரு டைய அறையில் இருக்கிருரா என்று கவனித்துக் கொண் |L-ssfs s

‘அறைக் கதவு ஒரு பென்ஸில் கனத்துக்கு லேசாகத் திறந்திருப்பது தெரிந்தது. திறந்த கதவின் இடுக்கு வழியாக வெளிப்பட்ட மின் ஒளி தாழ்வாரத்தில் படிந்திருந்தது.

உள்ளே மின் விசிறி சுழன்று கொண்டிருப்பதையும், அப்பா ஏதோ வேலையில் மூழ்கியிருப்பதையும் கண்டபோது அவள் திடுக்கிட்டாள். அப்பாவுக்குக் காது ரொம்பக் கூர்மை, வாசலில் டாக்ஸி வந்து நின்றபோது அவர் கட்டா பம் அதைக் கவனித்திருப்பார். தன்னை அழைத்து ஏன் இத்தனை நேரம்? எங்கே போயிருந்தாய்?’ என்று விசாரித் தால் என்ன பதில் சொல்லுவது என்ற திகிலுடன் மெது வாகப் பூண்போல் நடந்து சென்றாள். -

‘பாரதி!’’ சேதுபதிதான் அழைத்தார். அவர் குரலில் எப்போதுமே நயம் இருந்ததில்லே. இன்று வழக்கத்தைக் காட்டிலும் சற்று கடுமையாகவே ஒலித்தது.

பரம சாதுவைபோல் அவர் எதிரில் போய் நின்றாள் பாரதி.

‘இத்தனை நேரம் எங்கே போயிருந்தாய்??? சேதுபதி கேட்டார்.

‘காலேஜில்தான் இருந்தேன் அப்பா ஹாஸ்டலில் ஒரு பெண்ணிடம் கணக்குப் பாடம் கற்றுக்கொண்டிருந்தேன்’’ என்று துணிந்து பொய்யைச் சொன்னுள் பாரதி.

சேதுபதி ஒரு முறை அவளை ஏற இறங்கப் பார்த்தார். அவள் பொய் சொல்கிருள் என்பதை அவள் முகம் காட்டிக் கொடுத்து விட்டது. அதைப் புரிந்து கொண்ட சேதுபதி அவளுடைய பொய்யை அம்பலமாக்க விரும்பவில்லை. தான் அதை அறிந்து கொண்டதாகவும் காட்டிக் கொள்ளவில்லே. காரணம், அப்படிச் செய்வதால் தன்னிடம் அவளுக்குள்ள பயமும் மரியாதையும் குறைந்துவிடும் என்பதுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/48&oldid=689546" இலிருந்து மீள்விக்கப்பட்டது