பக்கம்:விசிறி வாழை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஏழு

சுழல் நாற்காலியில் சாய்ந்த வண்ணம், மேஜை விளிம் பைக் கால்களால் உந்தி முன்னும் பின்னுமாக ஆடியபடியே தீவிரச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் சேதுபதி. கல்கத்தா விலுள்ள ஒரு வர்த்தக ஸ்தாபனத்துடன் டிரங் டெலி போன்மூலம் தொடர்பு கொள்வதற்காகக் காத்திருக்கும் போது அந்தப் பொன்னை நேரத்தை வீணுக்காமல் தம் முடைய மோட்டார் தொழிற்சாலையின் எதிர்காலத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார்.

யோசனையின் தீவிரத்தில் அவர் தம்முடைய அகன்ற நெற்றிக்கும் வலது உள்ளங்கைக்குமிடையே சிக்கியிருந்த பென்சிலே இப்படியும் அப்படியும் உருட்டிக் கொண்டிருந்த சமயம், அப்பா இன்றைக்கு எனக்குப் பிறந்த நாள்’ என்று குதூகலத்தோடு கூறிக்கொண்டு அவருடைய அருமை மகள் பாரதி அவர் எதிரில் வந்து நின்றாள்.

‘அப்படியா? ரொம்ப சந்தோஷம் இன்றைக்கு உனக்கு எத்தனையாவது பிறந்த நாள்?’’ சேதுபதி கேட்டார்.

“இருபதாவது...’

“வெரிகுட்! உன் அத்தையிடம் சொல்லி முதல் தரமான விருந்து தயாரிக்கச் சொல்லு... உனக்குப் பால் பாயசம் ரொம்பப் பிடிக்குமே! உன் சிநேகிதிகளை யெல்லாம் சாப் பிடக் கூப்பிடுவதுதானே?’’

‘கூப்பிடாமல் இருப்பேன? அவர்கள் எல்லோரும் மாடி யில் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறர்கள். இன்னும் பத்து நிமிஷத்தில் விருந்து தயாராகிவிடும். அப்பா! நீங் களும் இன்று என்ைேடு சாப்பிட வேண்டும்...”

  • அப்படியா சங்கதி? எல்லா ஏற்பாடும் நடந்து கொண்

டிருக்கிறதா? இந்த வீட்டில் நடப்பது ஒன்றுமே எனக்குத் தெரிவதில்லை...??

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/74&oldid=689575" இலிருந்து மீள்விக்கப்பட்டது