பக்கம்:விசிறி வாழை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஒன்பது 95

ஆமாம்; குழந்தைப் பிராயம், வாலிபப் பருவம் என்ப தெல்லாம் ஒன்வே டிராபிக், போன்றது. ஒரு வழிப் பாலத் தில் ஒரு முறை போகத்தான் முடியுமே தவிர, திரும்பி வர முடியாது. திரும்பி அந்த வழியில் செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டாலும் முடியாது. திரும்பி வருவதற்கு மனம் இருக்கலாம். ஆனல் செயல்படுத்த முடியாது!’ என்றார் சேதுபதி. *

இப்படிச் சொன்னவர் சட்டென்று ஏதோ நினைத்துக் கொண்டவர்போல் பேச்சை நிறுத்திக் கொண்டு, இந்த உதாரணத்தை ஏன் சொன்னுேம் என்று எண்ணி மனத்திற் குள்ளாகவே வருத்தப்பட்டார்.

அவர் கூறிய வார்த்தைகள் பார்வதிக்குச் ‘சுருக்’ கென்றன.

‘உனக்கு வயதாகிவிட்டது. இளமைப் பருவத்தைக் கடந்துவிட்டாய். மீண்டும் அதை அடைய முடியாது. ஒரு வழிப் பாலத்தில் மீண்டும் செல்ல ஆசைப்படாதே?? என்று அவர் மறைமுகமாகச் சொல்கிறார் என்றே தோன்றியது அவளுக்கு. -

அதே சமயத்தில் அவர், ‘நானே அந்த ஒரு வழிப் பாலத்தில் திரும்பிச் செல்ல ஆசைப்படுகிறேன். எனக்கு மட்டும் வயதாகவில்லையா? என் உள்ளத்தில் புகுந்திருக்கும் ஆசைக்கும் அந்தரங்கமாக ஊசலாடும் உணர்வுக்கும் என்ன பொருள்? ஒரு வழிப் பாதையில் திரும்பிச் செல்ல விரும்பு கிறேன் என்பதுதானே பொருள்?? என்று எண்ணிக் கொண்டார்.

எர்வதியின் அறிவு குழம்பியது. உள்ளத்தில் ஆசைத் தி கொழுந்துவிட்டு எரிந்தது. அந்தத் தியைச் சற்றும் எதிர் பாராத நேரத்தில் நெருப்பணக்கும் இயந்திரம் ஒன்று வந்து அணத்து விட்டதைப்போல் இருந்தது சேதுபதியின் பதில். நான் ஒரு வழிப் பாதையில் திரும்பிச் செல்ல ஆசைப் படுகிறேன் என்பதைச் சேதுபதி அறிந்து கொண்டுதான் இம்மாதிரி கூறி எச்சரிக்கிருரோ? சொல்ல வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/99&oldid=689602" இலிருந்து மீள்விக்கப்பட்டது