உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

薰2感鑫 விஞ்ஞானச் சிக்கல்கள்

ஒவ்வொருவருடைய சிந்தனைச் சிக்கல்கள் ஒவ்வொரு அற்புதங்களைப் படைத்திருப்பதை, நாம் இன்றும் பார்த்தும் படித்தும் உணர்ந்தும் வருகிறோம். செர்மன் நாட்டிலே இருந்த உலகப் புகழ் பெற்ற விஞ்ஞான மேதைகளிலே ஒருவர் கோகுலே என்பவர்.

அவர், 'பென்சாயின்' என்ற இரசாயனப் பொருளைப் பற்றிய ஆராய்ச்சியிலே ஈடுபட்டி ருந்தார்.

பென்சாயின் என்ற மூலகத்தைப் பற்றி, உலக விஞ்ஞானிகள் நீண்ட நெடு நாட்களாக நன்றாக அறிவார்கள் *

அந்த 'பென்சாயின், ஹைட்ரஜன் அணுக் களாலும் ஆக்கப்பட்ட ஒன்று என்பதையும் அறிவார்கள்.

அது மிகவும் முக்கியமான, அடிப்படையான இசாயனக் குட்டுப் பொருள்களிலே ஒன்று என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

அந்த பென்சாயின், ஆறு கார்பன் அணுக்களாலும் ஆறு ஹைட்ரஜன் அணுக்களாலும் ஆக்கப்பட்ட ஒன்று என்பதையும் அறிவார்கள்.

அதனுடைய ஆக்கப் பூர்வமான விளைவுகளைப் பற்றி அவர்கள் படித்தும் இருக்கிறார்கள். ஆனால், அந்த அணுக்கள் வானவெளியில் எவ்வாறு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது என்ற அமைப்பு முறையைப் பற்றி அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

இந்த அணுக்களது அமைப்பு முறைப் பிரச்னை