உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 堑27 இதற்கு, சில துப்பறியும் கதைகளையே நாம் சான்றுகளாகக் கூறலாம்.

'ஓர் ஊரில் ஒரு திருவிழா நடக்கிறது. பல்லா யிரக் கணக்கான மக்கள் அந்த விழாவில் திரண்டு ஆடிப் பாடிக் களிக்கிறார்கள்.

பகல் முழுவதும் நடைபெறும் இந்தத் திரு

விழாவிற்கு, இரவில்தான்் அதிகக் கூட்டம் திரளுவது வழக்கமாகும்.

பெரும்பாலும், எல்லா ஊர் திருவிழாக்களிலும் இவ்வாறே இன்றும் நடைபெறுகிறது.

திருவிழா நடக்கும் அந்த ஊரிலுள்ள ஒரு விட்டில், திடீரென்று அன்றிரவு ஒரு மர்மக்கொலை நடைபெறுகிறது.

பிணத்தின் மீது இரத்தக் கறையோ - இரண காயங்களோ எதுவும் இல்லை.

கொலை செய்தவன், அந்த பிணத்திற்கு விலையுயர்ந்த உடைகளை உடுத்தித் துரக்கிக் கொண்டு வந்தான்் - திருவிழாவிற்கு!

ஒருநாள் நள்ளிரவு! அவரவருக்கு விருப்பமான ஆடல் பாடல் களியாட்டங்களிலும், வேடிக்கை விளையாட்டுக்களிலும் யாருக்கு எதெதில் குறிக்கோளோ, அததற்கேற்ப - மகிழ்ச்சிகரமாக - அனுபவித்துச் சுற்றிச் சுற்றி விழாவை வலம் வருகிறார்கள் மக்கள்.

கொலைகாரனுக்கு அந்த பிணத்தை யாருக்கும் தெரியாமல் எங்காவது போட்டு விட வேண்டு மென்ற எண்ணம்!