உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 鳄2姆

திருவிழாவிலே கூடியுள்ளவர்களிலே பெரும்

பான்மையோர் மதுபானம் உண்ட சீமான்கள் சீமாட்டிகள்!

அதனால், தெளியாத போதையிலே அவரவர் மிதந்தபடியே தள்ளாடும் நடையோடு சென்று கொண்டிருந்தனர்.

பெண்களை மார்பிலே சாய்த்துக் கொண்டு நடனமாடியபடியே நகர்பவர்கள் ஒரு புறம்!

இடுப்போடு இடுப்பாக இன்பவல்லிகளை இணைத்துக் கொண்டவர்கள் இன்னோர் புறம்!

இவ்வாறு, திருவிழாவில் கூடிய மக்கள் களி போதையோடும் காரிகை மயக்கோடும் சென்ற படியே உள்ளனர்.

பார்த்தான்், கொலைகாரன் - இந்தக் காட்சிகளை! நிமிர்த்தி நிற்க வைத்திருந்த சவத்தை ஒருவனது தனது முதுகிலே இலேசாக சாய்த்தபடியே அவன் ஆடிக்கொண்டு நகர்ந்தான்்! -

சவம் சாய்ந்த சீமான்! ஆ. என்றபடியே அலற., பிணத்தை அப்படியே மற்ற சீமான்மீது அவன் சாமர்த்தியமாகச் சாய்த்தான்்!

சாய்ந்த சவத்தைக் கண்ட ஒவ்வொரு சீமானும், ஏதோ ஒருவன் தன்மீது சாய்கிறான் என்ற மயக்கத்தில், அந்த பிணத்தை அப்படியே மற்றவர் மீது சாய்த்தபடியே ஒவ்வொருவராக ஆடிப் பாடிச் சென்றார்கள்.

பிணம் ஒன்று இப்படியே ஒருவர் மீது ஒருவராகச் சாய்ந்து கொண்டே போவதைப் போலீசாருள் ஒருவன் பார்த்து விட்டான்.