பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

驾龙鲁 விஞ்ஞானச் சிக்கல்கள்

அவ்வாறு கண்ட்போது, நம் அறிவுக்கு காணப்பட்ட விளைவுகள் என்ன என்பதையும் நோக்க வேண்டும்.”

இவ்வாறெல்லாம் கிடைத்த செய்திகளிலே இருந்து, நாம் ஏதாவது புதிய கருத்துக்களைப் பெறும் திறமையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட தத்துவ விதிகளுக்கு எவன் தனது அறிவையும், சிந்தனையையும் உட்படுத்துகின் றானோ, அவனே உலகில் விஞ்ஞானச் சாதனை களை உருவாக்கும் மேதையாகத் திகழ்கிறான்.

உலகிலே தோன்றிய, ஒவ்வொரு அறிவியல் வித் தகனும், தனது விஞ்ஞான ஆராய்ச்சியிலேயே ஏதாவதொரு சிக்கலைக் காண்கிறான்.

எந்தச் சிக்கலை அவன் பார்க்கிறானோ - அல்லது தோற்றுவிக்கிறானோ - அந்தச் சிக்கலை அவிழ்த்திட அல்லும் பகலும் அவன் அயராது பாடுபடுகிறான்.

அரும்பாடுபட்ட அந்த அறிவு, அவனது உழைப்பிற்குரிய பரிசாக, அவனுடைய அரிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புச் சாதனைகளாகத் திகழ் கின்றன.

அந்தச் சிக்கல், நாளடைவில் ஒரு பெயரைப் பெற்று உலகத்துக்குப் பல வகையிலும் அறிவுச் சுரங்கமாக அமைந்து விலை மதிக்க முடியா சிந்தனைச் செல்வங்களை வாரி வாரிக் குவிக்கிறது.