உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி [ 73 அஞ்ஞான இருள் கவ்விய இந்த தரணிக்கு, உனது அருட்சோதியால் மெய்ஞானத்தைப் பரப்பும் சாத்திர வித்தைகளை யார் செய்தாலும், அவர்களிடம் - அவர்களையும் அறியாமல் அங்கிங்கெனாதபடி, எங்கும் என் கலையே தோன்றி, உன் புகழைப் பரப்ப வேண்டும் என்று மெய் மறந்து கண்ணிர் சிந்தி உருகியபடியே உரைத்தான்் ஆருட விற்பன்னன் சகாதேவன்.

பழம், கண்ணன் கையை விட்டு அசையவில்லை. மீண்டும் சிரித்தார் சத்யபாமை மணாளன்.

'மைத்துனர்களே! நீங்கள் இதுவரை கூறியவை எல்லாம் ஆசைகளே தவிர, ரகசியங்கள் அல்லவே! அதனால் தான்், பழம் என் கையை விட்டுப் போகவே மறுக்கிறது. தங்கை திரெளபதி உன்னிடம் ஏதாவது வெளியே கூறமுடியாத ரகசியம் இருந்தால் அதைச் சொல்லம்மா' என்றார் வேணு கோபாலன்.

வெட்கத்தால் முகம் சிவந்தாள் வேல்விழியாள் பாஞ்சாலி! எப்படிக் கூறுவது ரகசியத்தை என்று அச்சமுற்றபடியே கூச்சப்பட்டுக் கொண்டிருந்தாள்.

எல்லாவற்றிற்கும் சூத்ரதாரியான மாயக் கண்ணன், பாஞ்சாலி, பாண்டவர் தர்ம பத்தினிக்கு அச்சமோ கூச்சமோ வரலாமோ!

இரகசியத்தை உனது தமையனாகிய என்னிடம் தான்ே கூறுகிறாய்? பிறகு ஏன் வெட்கம்? என்று தைரியத்தை தந்தார் கோபியர் கொஞ்சும் ரமணன்.

‘அண்ணா! எனது நீண்ட நாள் ரகசியத்தைச் சொல்கிறேன். குற்றமிருந்தால் எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்,