உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள

விடுமுறை நாட்களில் அவருடைய பாடசாலைக்குச் சென்று பாடம் சொல்லிக் கொடுப்பதில் உதவி செய்து வந்தார்.

அவர் வழக்கம்போல் ஒருநாள் மாலை தம் முடைய நண்பர் சாப்பூயி என்பவருடன் உலாவச் சென்றார். அப்பொழுது ஒரு ரஸாயனவிஷயம் அவருடைய மனத்தைக் கலக்கிக் கொண்டிருந்தது. டார்டாரிக் ஆஸிட் என்றும் ரேஸெமிக் ஆஸிட் என் ஆறும் இரண்டு ஆஸிட்கள் உள. அவை சோடா உப்புடனும் அமோனியத்துடனும் சேர்ந்து உண் டாகும் கிரிஸ்டல்கள் பார்வைக்கு ஒரே வித மாகத்தான் காணப்படுகின்றன. ஆல்ை ஒளியா னது டார்டாரிக் ஆஸிட் மூலமாக வங் கால் வலது. பக்கமாகச் சாய்ந்து விடுகிறது. ரேஸெமிக் ஆஸிட் மூலமாக வந்தால் ஒருபக்கமும் சாயாமல் கேராகவே செல்லுகிறது. இந்த வித்தியாசத்துக்குக் காரணம் என்ன என்று சாப்பூயியிடம் கேட்டார்.

ஆல்ை அந்த நண்பர்க்கு இங் த விஷயம் என்னதெரியும் ? அவர் ‘இந்த உலகத்தின் மர்மத் தைக் கூறும் தத்துவ விசாரணையை விட்டுவிட்டு, இவர் என்ன இந்த அற்ப விஷயங்களில் ஈடுபட் டிருக்கிறார்’ என்று ஆச்சரியப்பட்டார்.

ஆனல் பாஸ்ட்டியருக்கோ சதாகாலமும் அங் தக் கிரிஸ்டல்களைப் பற்றிய சிங் கனேதான். அவர் ஏதோ அது விஷயமாகப் புதிதாகக் கண்டுபிடிக் க்ப் போவதாக எண்ணினர். அந்த எண்ணத்தை அறிந்தால் தம்முடைய தங்தை சந்தோஷிப்பார் I06