பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

கண்டார். ஆல்ை அது யுரேனியத்தைவிட அதிக சக்தியுடையதாக இருந்தது.

அது மட்டுமன்று. யுரேனிய அக் கட்டியும் தோரி யக் கட்டியும் யுரேனியமும் தோரியமும் இருக்கும் அளவுக்கு அதிகமாக அங்தப் புதிய ஒளியை வீசக் கண்டார். அதற்குக் காரணம் பாது ? சகல வஸ் துக்களையும் ஆராய்ந்தாயிற்றே ? ஆதலால் இது வரை அறியப்படாத ஒரு புத்தம் புதிய பொருளாயி ருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.

புதிய வஸ்துவா ? அது நிச்சயம் தான? அதை வேரு கப் பிரித்து எடுத்தால் தான் அறிஞர்கள் ஆம் என்று ஒப்புக் கொள்வார்கள். அம்மையா ருடைய ஆராய்ச்சிகள் அவருடைய கணவருடைய கவனத்தைக் கவாலாயின. அதன் மேல் அவர் தம்முடைய ஆராய்ச்சியை விட்டுவிட்டு மனைவி யாருடன் கலங்து ஆராய ஆரம்பி அத்தார்.

இருவரும் யுரேனியம் காண உப்படும் தார் எண் ணெய்க் கட்டியிலுள்ள சகல ராைனப் பொருள் களையும் தனித்தனியாகப் பிரித் து ஆராய்ந்தார் கள். அதன் பயனுக 1898 ஜூலை மாதத்தில் யுரே னியத்தையும் தோரியத்தையும்விட அதிகமான சக்தி வாய்ந்த ஒரு வஸ்துவைப் பிரித்து எடுத்தார் கள். எப்பொழுதும் அவருக்கு தாம் பிறந்த போ லந்து தேசத்தைப் பற்றியே ஞாபகமாதலால் இப் பொழுது அவர் தாம் முதன் முதலில் கண்டு பிடித்த அந்த அபூர்வமான வஸ்துவுக்குப் போ லோனியம் ‘ என்று பெயரிட்டார். 2145