உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மைக்கேல் பாரடிே

சிந்தித்துக் கொண்டிருந்தது. எப்பொழுது இந்த வேலையை விட்டு விட்டு விஞ்ஞான வேலை செய்யுங் காலம் வரும் என்று ஏங்கிக்கொண்டிருந்தார்.

ஒரு நாள் புஸ்தகக் கடைக்கு டான்ஸ் என் அனும் பெயருடைய ஒருவர் தம்முடைய புஸ்தகங்க களே பைண்ட் செய்வதற்காக வந்தார். மைக் கேல் ரஸாயன நூல் வாசித்துக்கொண்டிருப்பதைக் கண்டார். சி டி வ ரி ட ம் விசாரித்தார், அவ ருக்கு விஞ்ஞானத்திடமுள்ள ஆவலே அறிந்தார். அந்தச் சமயம் ஸ்ர் ஹம்ப்ரி டேவி என்னும் விஞ் ஞான சாஸ்திரியார் ராயல் ஸ்தாபனத்தில் ரஸ்ா யன சாஸ்திரத்தைப்பற்றி அடிக்கடி பிரசங்கங்கள் நிகழ்த்திக்கொண்டிருந்தார். ரஸாயனம் என்பது சுலபமாகப் பிரசங்கம்செய்யக்கூடிய விஷயமன்று. ஆனல் அவர் அழகாகப் பிரசங்கம் செய்துவங்த படியால் விஞ்ஞானிகள் மட்டுமன்று, எல்லோ ருமே திரள் திரளாகச் சென்று அவருடைய பிர சங்கங்களைக் கேட்டு வந்தார்கள்.

அந்தப் பிரசங்கங்கள் கேட்கப் பணம் கொடு த்து டிக்கட் வாங்கவேண்டும். அதனல் டான்ஸ் பணம் கொடுத்து டிக்கட் வாங்கி மைக்கேலுக்குக் கொடுத்தார்.

மைக்கேலுக்கு உண்டான சங்தோஷத்துக்கு அளவே யில்லை. அந்தக் காலத்தில் பெரிய, விஞ்ஞானி என்று பேரும் புகழும் பெற்று விளங் கிய டேவியின் பிரசங்கங்களைக் கேட்கும் பாக்கியத் தைவிடப் பெரிய பாக்கியம் உண்டோ என்று

I7.