பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

கொண்டார். அப்படி அவர் 30 வருஷகாலம் இருந்து அரும்பெரும் உதவிகள் செய்துவந்தார்.

அதன்பின் 1858-ம் வருஷத்தில் விக்டோரியா மகாராணியார் தமது அரண்மனையிலேயே ஒரு பங்களாவைப் புதிப்பித்து அவருக்கு அளித்து அதில் அவரை வாழும்படி செய்யும் பாக்கியத் தைப் பெற்றார்.

அந்தக் காலத்தில் கலங்கரை விளக்கங்களில் வைத்திருந்த விளக்குகள் சரியாக இல்லாதபடி யால் அவரை நாடினர்கள். அவர் பல மாறுதல்கள் செய்து உதவிசெய்தார். 1858-ம் வருஷத்தில் அவ ருடைய டைனமோவின் உதவியால் மின்சார விளக்கு ஒன்று போர்லாந்து என்னுமிடத்திலுள்ள கலங்கரை விளக்கத்தில் ஏற்றிவைக்கப்பட்டது. அந்த விளக்கைக் கண்டதும் பாரடே “நான் உங்க எளிடம் ஒரு கைக்குழந்தையைக் கொடுத்தேன், அதை நீங்கள் ஒரு பீமனகச் செய்துவிட்டீர்கள்’ என்று கூறி மகிழ்ந்தார்.

அடுத்த வருஷத்தில் புஸ்தகங்கள் வெளியிடு பவர் ஒருவர் அவருடைய பிரசங்கங்களை வெளி யிடும் உரிமையை அ ளி க் த ல் அதற்குப் பெரும்பொருள் தருவதாகக் கூறினர். அதற்கு பாரடே நான் எப்பொழுதும் பணத்தைவிட விஞ் ஞானத்தையே அதிகமாக நேசித்துவருகின்றேன். வேலைசெய்வதே எனக்கு இன்பங் தருவதால் நான் பணக்காரகைத் துணியமாட்டேன்” என்று பதில் கடறிவிட்டார். I94