உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

சிகளின் பயனுய் உயிருள்ள பிராணிகளைப் போல வே உயிரில்லாக வஸ்துக்களும், மிருகங்களைப் போ லவே செடிகளும் நடந்துகொள்வதைக் கண்டார்.

1900-ம் வருஷத்தில் சர்வதேச விஞ்ஞான காங் கிரஸ் பாரிஸ் நகரத்தில் நடைபெற்றது. அதற்கு நம்நாட்டுப் பிரதிநிதியாக இந்திய அரசாங்கத் கார் போஸை அனுப்பிவைத்தார்கள். அங்கே கூடி யிருந்த விஞ்ஞான நிபுணர்கள் முன்னிலையில் தாம் புதிதாகக்கண்ட உண்மைகளைக் குறித்து விரிவா கப் பிரசங்கம்செய்தார்.

அதன்பின் இங்கிலாந்துக்குச் சென்று அங் குள்ள விஞ்ஞானிகளிடத்திலும் இந்த உண்மை களைச் சொன்னர். அவர்களில் சர். மைக்கேல் பாஸ்டர் என்பவர் பெரிய உடல நூல் புலவர். உயிரில்லாதவஸ்து உயிருள்ள வஸ்துபோல் நடப் பதை போஸ் காட்டியதும் பரம ஆச்சரியம் அடைந்தார். உடனே இக்த விஷயத்தை விரிவாக எழுதி ராயல் சொஸைட்டிக்கு அனுப்புமாறு அவசரப்படுத்தினர். அப்படியே எழுதி போஸ் அனுப்பிவைத்தார். அதன்மேல் ராயல் சொ வைஸ்ட்டியார் அவரைத் தங்கள் சங்கத்துக்கு வந்து விஷயத்தை விளக்குமாறு சொன்னர்கள். அப் படியே போஸ் செய்தார்.

அங்க்ே கூடியிருந்த வி ஞ் ஞ | னி க ளி ல் சர்ஜாண் ஸான்டர்ஸன் என்பவர்தான் அங்தக் காலத்தில் இங்கிலாந்தில் உடல்நூலில் மகா பெரிய நிபுணர் என்று பேர் பெற்றிருந்தார். அவரும் பல வருஷங்களாகத் தசைகளைப் பற்றியும் நரம் 236