பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி3ஞானப் பெரியார்கள்

பித்தன. ஆகவே கவிஞர்கள் கூறும் காரணம் தவறு என்று கண்டார்.

பிரான்ஸ் தேசத்தில் அகராதி எழுதுகிறவர் ஒருவர் கண்டு என்பதற்கு பின்புறமாக கடக்கும் ஒரு சிறிய சிவந்த மீன்’ என்று பொருள் எழுதி யிருந்தார். அதைக்குறித்து ஒருவர் உயிர்தாம் புலவரான கூவியர் என்பவரிடம் சரிதான என்று கேட்டார். அதற்குக் கூவியர் ‘கிரம்ப அழகாக எழுதியிருக்கிறது. ஆனல் கண்டு மீனுமில்லே, பின் புறமாக கடக்கவும் முடியாது, வேகவைத்தால்தான் சிவப்பாய் இருக்கும், சிறியதாகவே இருக்கவேண்டு மென்ற கட்டாயமும் கிடையாது. இந்த விஷயங் களே எல்லாம் விட்டுவிட்டுப் பார்த்தால் அகராதியில் எழுதியிருக்கும் பொருள் பரிபூரணமாகச் சரியான தாகும்’ என்று சிரித்துக்கொண்டு கூறினர்.

அல்லிப் புஷ்பம் சந்திரனேக் கண்டு விரியும், சூரியனைக்கண்டு குவியும் என்று கவிஞர்கள் கூறும் வர்ணனையும் பிரான்ஸ் அகராதி கண்டுக்குக் கூறும் பொருள் போலவே இருக்கிறது. அல்லிப்புஷ்பம் சந்திரன் வராமலும் விரியும், சூரியன் வந்தால் குவியாமலுமிருக்கும்.

அப்படியானல் அல்லிப்புஷ்பம் இரவில் மலரு வதற்கும் பகலில் குவிவதற்கும் காரணமென்ன ? குளிர்ச்சியும் உஷ்ணமும்தான் காரணம் என்று போஸ் கூறினர்.

போஸ் வெயில், காற்று, மழை தாக்காதபடி ஒரு செடியைக் கண்ணுடிப் பந்தலின் கீழ் வெகு ஜாக் கிரதையாக வளர்த்தார். ஆனல் அதற்குப் போது 248