உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*================ -% GPfuur ================

முன்னுரை

சென்ற நூறு வருஷ காலத்திலே விஞ்ஞானமானது வாயு வேகம், மைேவேகமாக வளர்ந்து வந்திருக்கின்றது. இப்போது எங்கும் விஞ்ஞானத்தின் பேச்சாகவே இருந்துகொண்டிருக் கிறது. நாம் நாள்தோறும் அது வழங்கியுள்ள வசதிகளேயே அனுபவித்து வருகிருேம். அது செய்து வரும் அற்புதங்கள் எந்தப் புராண இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளவற்றிலும் சிறங் தனவாக இருக்கின்றன. நம்முடைய நாகரிகத்தின் ஜீவநாடி விஞ்ஞானமே என்றுகடடச் சொல்லும் படியாக இருக்கிறது.

உலகெங்கும் அறிஞர்கள் எந்த விஷயத்தைப்பற்றிப் பேசி லுைம் விஞ்ஞான ரீதியாக ஆராயவேண்டும் என்றும் அந்த ரீதியாக ஆராய்ந்தால்தான் உண்மையைக் காணமுடியும் என்றும் வற்புறுத்துகிறார்கள்.

இவ்விதம் விஞ்ஞானம் வாழ்க்கை வசதிகளே அளிப்பதாக வும் உண்மையைக் காட்டும் தனிக் கருவியாகவும் இருப்பதால் நாம் விஞ்ஞானத்தை நாளுக்கு நாள் அதிகமாகக் கற்கவேண் டியது அவசியமாகும். ஆனல் அது சாதாரண மக்களுக்கு ஆரம்பத்தில் கஷ்டமாயும் சுவையில்லாததாயும் தோன்றும். ஆல்ை பெரியோர்களுடைய சரிதை அனைவர்க்கும் சந்தோஷம் கரும். அகல்ை விஞ்ஞானத்தின் ஒவ்வொரு துறையிலும் தலை சிறந்து விளங்கும் விஞ்ஞானப் பெரியார்களுடைய சரிதையை இங்கு தங்துளேன். விஞ்ஞானிகளுடைய வாழ்க்கை வரலாறு மிகுந்த சுவையுடையதாக இருந்தபோதிலும் அவர்கள் எந்த விஞ்ஞான உண்மையைக் கண்டுபிடித்தார்கள் என்பதும் அதைக் கண்டுபிடித்த முறை பாது என்பதும் அகல்ை மக் களுக்கு அவர்கள் செய்துள்ள கன்மை என்ன என்பதுமே படிக்கப் படிக்கக் கெவிட்டா அறிவின்பம் தருவனவாகும். அந்தக் கருத்தைப் பிரதானமாகக் கொண்டே இந்தப் பெரியார் பதின்மருடைய சரிதையை எழுதியிருக்கின்றேன்.

தமிழ் நாட்டார் என் முயற்சிக்கு ஆதரவு அளித்து உற் சாகம் ஊட்டுவார்கள் என்று நம்புகின்றேன்.

சென்னை, 23–12–'46 பொ. திருகூடசுந்தரம்