பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூட்டன்

ஐரோப்பா, கண்ட முழுவதிலும் பதினேழாம் அாற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கில காட்டில் வாழ்ந்த ஒரு மேதாவியைப் பற்றிப் பெரும் பேச் சாக இருந்தது. அதல்ை ஒருநாள் அவரைப் பார்த்துப் போக விரும்பி பிரஞ்சு ஆசிரியர் ஒருவர் பாரிஸ் நகரத்திலிருந்து லண்டன் மாநகருக்கு வங்து சேர்ந்தார். #.

ஆங்கில மேதாவியைப் போய்ப் பார்த்து அவ ருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது அவருடைய படிப்பறையின் கதவில் ஒன்று பெரிதும் ஒன்று சிறிதுமாக இரண்டு துவாரங்கள் செய்யப்பட்டிருப் பதைக் கண்டு அவை எதற்காக என்று மேதாவி யைக் கேட்டார்.

அதற்கு மேதாவி-'அவையா? நான் வேலையா யிருக்கும்போது பிறர் வந்து இடைஞ்சல் செய்யா திருக்கும் பொருட்டு எப்பொழுதும் அறையின் கதவை மூடியே வைத்திருப்பேன். அப்பொழுது என்னுடைய பூனேகள் மட்டும் வரலாம். அதற்காகத் தான் அந்தத் துவாரங்கள்’ என்று உரைத்தார்.

அதற்குப் பிரஞ்சு ஆசிரியர் - அப்படியானல் பெரியது வாரம் சிறிய துவாரம் இரண்டு எதற்கு ? என்று மறுபடியும் கேட்டார்.

அதற்கு மேதாவி-பெரிய பூனேக்குப் பெரிய துவாரம் சிறிய குட்டிக்குச் சிறிய துவாரம்’ என்று பதில் உரைத்தார்.

47