பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எத்தனை பேரோ!

273

என்று தெரிந்ததும் அவர்களும் உடனே விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தனர். அடுத்த நிமிஷம் பெரியசாமியின் பிரேதம் வழக்கம்போல் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு, எல்லாம் வல்ல பரம் பொருளான பணத்தின் அருளினாலே, இயற்கை மரணம்’ என்று தீர்ப்புக் கூறப்பட்டது . எவனா யிருக்கட்டும், செத்துப்போன பிறகு விசேஷ கவனம் செலுத்தும் நம் சர்க்காரின் கருணையை எவ்வளவு தூரம் பாராட்டினாலும் போதாது போங்கள்!

* * *

றுநாள்காலை ஆறு மணிக்கு, “எசமான் என்ன சொல்வாரோ, என்னமோ என்று நடுங்கிக்கொண்டே சின்னச்சாமி வந்து சேர்ந்தான். அவனைக் கண்டதும் செட்டியாருக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. "ஏண்டா, நாயே! நேற்றிரவு ஏன் வரவில்லை?” என்று எரிந்து விழுந்தார்.

"என் பெண்டாட்டியைத் தேள் கொட்டிவிட்டதுங்க!" என்று ஆரம்பித்தான் சின்னச்சாமி.

"சரி, உன் பெண்டாட்டியைத் தேள் கொட்டிவிட்டதோ இல்லையோ, பின்னே நீ ஏன் இன்று வேலைக்கு வந்தாய்? போய் அவளைத் தூக்கி வைத்துக் கொண்டிரு, போ இங்கே நிற்காதே!"

"எசமான்....!"

"போடா! நேற்று அவன் திருடனைக் கண்டதுமே கீழே விழுந்து பிராணனை விட்டுவிட்டான்; நீ இருட்டைக் கண்டாலே பிராணனை விட்டு விடுவாயோ, என்னமோ - போய்த் தொலை!”

சின்னச்சாமிக்கு ஒன்றும் புரியவில்லை. அருகிலிருந்த தோட்டக்காரனை ரகசியமாக விசாரித்து விஷயத்தைத் தெரிந்து கொண்டான். "நல்ல வேளை நேற்று நாம் வராமற் போனது நல்லதாய்ப் போச்சு!" என்று அவன் தனக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டான்!

அதற்குள் செட்டியாரின் ஆத்திரமும் ஒருவாறு அடங்கியது. அவர் குரலும் உச்சஸ்தாயியிலிருந்து கீழ்ஸ்தாயிக்கு இறங்கியது. "ஏண்டா, சின்னச்சாமி அந்தப் பெரியசாமிக்குப் பெண்டாட்டி பிள்ளையெல்லாம் இருக்கா என்ன?” என்று விசாரித்தார்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க; அவன் ஒண்டிக்கட்டைங்க! அது தெரியாமத்தான் நீங்க இத்தனை நாளும் எனக்கும் அவனுக்கும்

வி.க. -18