பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புரியாத புதிர்

நினைத்துப் பார்த்தால் எனக்கே வேடிக்கையாய்த் தான் இருக்கிறது - எத்தனையோ பேரைப் பற்றி நான் தெரிந்தவன் போல் எழுதுகிறேன், பேசுகிறேன் - ஆனால் என்னைப் பற்றியே எனக்கு இன்னும் தெரிந்ததாகத் தெரியவில்லை!

இது கதையல்ல; கற்பனை யல்ல; உண்மை; உண்மையிலும் உண்மை.

என்னைப் பற்றியே நான் இன்னும் தெரிந்து கொள்ளாமலிருக்கும்போது, என் மனைவியைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? - ஒன்றுமே தெரியாது தான்!

ஆனால், இந்த அதிசயமான உண்மையை நான் ஒப்புக்கொள்கிறேனா என்றால், அதுதான் கிடையாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வருஷமும் நான் அவளைப் பற்றி ரொம்ப ரொம்பத் தெரிந்து கொண்டிருப்பவன் போலவே பாவனை செய்து வருகிறேன்!

நான்தான் இப்படி யென்றால் அவளாவது எனக்கு மாறுபட்டிருக்கிறாளா? அதுவும் இல்லை; அவளும் என்னைப் பற்றி ரொம்ப ரொம்பத் தெரிந்து கொண்டிருப்பவள் போலவே நாளதுவரை பாவனை செய்து வருகிறாள்!

இந்த லட்சணத்தில் எங்களுடைய வாழ்நாட்கள் ஒவ்வொன்றாக எங்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த நாட்களைப் பற்றி நாங்களும் கவலைப்படுவதில்லை.

அப்படி ஏதாவது ஒரு நாளைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டோம், அந்த நாளும் எங்களைப் பற்றிக் கொஞ்சம் கவலைப்பட்டது என்றால் அது ஒரே ஒரு நாளாய்த்தான் இருக்க முடியும். அந்த நாள் எங்கள் வாழ்வில் ஒரு திருநாள்!

அந்தத் திருநாளைப் பற்றிச்சொல்வதற்கு முன்னால் உங்களிடம் ஒரு வெறும் நாளைப் பற்றிச் சொல்ல வேண்டும்; ஆமாம்; சொல்லிவிடத்தான் வேண்டும்.

* * *

அன்றிரவு நான் சாப்பிட்டு முடித்ததும், படுக்கையைச் சுருட்டி எடுத்துக் கொண்டு எங்கள் வீட்டு மாடிப்படிகளில் காலை எடுத்து