பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

விந்தன் கதைகள்

“சுப்பனையும், கொஞ்சம் புண்ணியம் பண்ணச் சொல்லலாம்’னுதான் அப்பா”

“முன் ஜன்மத்தில் நான் எண்ண புண்ணியம் பண்ணினேனோ. இந்த ஜன்மத்தில் எனக்கு அது எப்படித் தெரியும்?”

“இதென்ன அப்பா வேடிக்கையாயிருக்கே? நீ செய்த புண்ணியம் அம்மாவுக்குத் தெரிகிறது; உனக்குத் தெரியவில்லையே?”

“ஊஹூம்; அம்மாவுக்கும் தெரியாது; எனக்கும் தெரியாது....!”

“பின் யாருக்குத்தான் தெரியும், அப்பா?”

“கடவுளுக்குத்தான் தெரியும்”

“கடவுளுக்கு மட்டும் தெரிந்து என்ன பிரயோஜனம் அப்பா? பாவ புண்ணியம் பண்ணினவனுக்குத் தெரிந்தால் தானே. அவன் இந்த ஜன்மத்திலாவது தன்னை மாற்றிக் கொள்ள முடியும்?”

“போடா, போக்கிரி அந்தக் கேள்வியெல்லாம் உனக்கு எதற்கு?”

“இன்னும் ஒரே ஒரு கேள்வி, அப்பா புண்ணியம் எப்படிப் பண்ணனும்னாவது உங்களுக்குத் தெரியுமோ?”

“கோயில் கட்டுவது, குளம் வெட்டுவது, அன்னதானம் செய்வது...”

“அடேயப்பா! இதெல்லாம் சுப்பனால் செய்ய முடியுமோ? இரண்டு கை கூழுக்கு அவன் நம்மிடம் நாளெல்லாம் வேலை செய்யவேண்டியிருக்கிறதே அவன் எங்கே அன்னதானம் செய்வது? அவனுக்குக் குடிக்கத் தண்ணீரைக் காணோம், அவன் எங்கே குளம் வெட்டுவது? அவனுக்கு இருக்க வீட்டைக்காணோம், அவன் எங்கே கோயில் கட்டுவது? இந்த லட்சணத்தில் கடவுள் அவனை வைத்து விட்டு நீ புண்ணியம் செய்யவில்லை; அதனால் அடுத்த ஜன்மத்தில் நீ கஷடப்பட வேண்டுமென்பது உன்னுடைய விதி’ என்றால், அக்கிரமமான்னா இருக்கு”

“இது ஏதடா, வம்பாய்ப் போச்சு” என்று அப்பா எங்கோ நடையைக் கட்ட ஆரம்பித்தார்.

“எங்கேப்பா, போறே? கடவுளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவா?” என்று கேட்டான் ரவி.