உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106" திசுக்கள் சக்தியிழப்பதால், என்ன குறைந்து போகும் என்று கேட்கலாம்? தசைகள் தங்களது வலிமையையும் இழக்கின்றன. இதனல் உடல் நிமிர்ந்து நிற்கின்ற ஆற்றலை இழக்கின்றது. நினைவுக்கேற்ப செயல்பட முடியாமல், உடலின் செயல் வேகம் குறைகிறது.

மார்புக்கூடு முன்போல் அதிகம் விரிந்து இயங்க முடிவதில்லை. காரணம்-தசைகளின் சக்தியின்மைதான் பலவீனந்தான். விலா எலும்பைச் சார்ந்த தசைத் தொகுதிகள் எல்லாம் இயக்கம் இழப்பதால்தான், இவ்வாறு இயக்கம் குறைவதால், காற்றுப் பையான நுரையீரலானது அதிக உயிர்க் காற்றை (பிரான வாயுவை) நிறைவாகப் பெற முடியாமல் போகின்றது.

உயிர்க் காற்றுத்தானே உடலுக்கு முக்கியம். தேவைக்கு கிடைக்காத உயிர்க் காற்றின்மையால், காற்றைப் பெற்று வைக்கின்ற காற்றுப்பை செல்களின் சுவர்கள் மெலிவடைகின்றன. சுவாசம் அளவில் குறைகிறது. இப்படியாக உயிர்க் காற்றின் தேவை உடலுக்கு அதிகம் வேண்டியிருந்தாலும் கிடைக்காது போவதால், சுவாச வழியின் உள்ளமைப்பு மெதுவாகிக் குறுகிககொள்கிறது. வழி குறுகக் குறுக காற்று வரத்தும் குறைந்துதானே போகும் !

உயிர்க் காற்றின் சக்தியால்தானே இரத்த ஒட்டம் விரைவாக ஒடும் ஆற்றலைப் பெற்றிருக்கிறது. உடலின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒடி, இரத்தத்தினை எடுத்துச் செல்லும் இரத்தத் தந்துகிகளின் ஒட்டத்தில் காற்றின்சக்தி இல்லாமையால், ஆங்காங்கே ஒட்டத்தில் தடை ஏற்பட்டு விடுகிறது.