உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
12


அங்கே தனி மனிதப் பண்பாகிய கெளரவம் தலைதுாக்கி விளையாடும். அப்பொழுது ஏற்படுகின்ற ஆர்ப்பாட் -த்தால், அவசரத்தால், ஆர்வத்தால், ஆவேசத்தால், அற்பத்தனமாக பிறரிடம் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் "ஒரு குழந்தையை வையாதே பாப்பா என்று கூறினர்.

இவ்வாறு இளமையிலேயே மழலையை ஈர்க்கின்ற விளையாட்டு, மகிழ்விக்கின்ற விளையாட்டு, மனதை பதமாக்குகிற விளையாட்டு, முதுமை வரையிலும் தொடர்ந்து துணையாகவே இருந்து வருகிறது. வாழ்வுக்குத் துணை விளையாட்டு என்ருல், அது, நல்ல கண்பன் நாலாயிரம் கோடிக்குச் சமம்’ என்ற பழமொழிக்கு இலக்காகவே அமைகிறது. முதுமை வரை துணை வருகின்ற விளையாட்டு, வாழ்க்கைக்கு எத்தனை எத்தனை அரிய பயிற்சிகளையெல்லாம் பெற வழிகாட்டு கிறது என்பதை நாம் அறிந்துகொள்வோமாக!

நல்ல வாழ்வுக்குத் துணை நம்முடைய கலமான வாழ்வுக்கு வேண்டியவை நோக்கம், நுணுக்கம், ஒழுக்கம், இணக்கம், பழக்கம்,விளக்கம் என்பன. இவைகளை எல்லாம் விளையாட்டு நமக்கு எவ்வாறு ஊட்டி. அனுபவ விழிகளைத் திறந்து காட்டும் முகத்தான், ஞான ஒளி கூட்டித் திகழ்கின்றது என்பதனை இனி காண்போம்.

உலகம் என்பது ஒரு விளையாடும் களமாக இருந்தால், அதில் வாழும் மக்களனைவரும் விளையாடும் ஆட்டக்காரர்களே. அவர்கள் காலம்’ எனும் பந்தை 'இன்பம்’ என்னும் இலக்கு நோக்கி அடித்தாடவே முயல்கின்றனர். ஆகவே இன்பம் என்னும் இலக்குவை