பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

21


கொள்கின்றன. தன்னை மறந்து உறங்குகிறான். பஞ்சு மெத்தை, பறக்கும் காற்றாடி, போர்வை, பாதுகாப்பான அறை என்றெல்லாம் அவன் உடல் தேடுவதில்லை.

வெயிலில் காய்கிறான், மழையில் நனைகிறான், பனியில் நலிகிறான். என்றாலும் நோய் அவனை நெருங்குவதில்லை. காரணம் என்ன?

வெயில் தரும் வெகுமதி

வெயிலில் அவனுக்கு 'டி' வைட்டமின் கிடைக்கிறது. 'டி' வைட்டமின் தருகின்ற கால்சியச் சத்தானது எலும்புகளை வலிமையுடையதாக மாற்றுகிறது. வலிமையான எலும்புக் கூட்டில் உள்ள எலும்புச் சோற்றில் தான் சிவப்பு இரத்த அணுக்கள் தோன்றுகின்றன.

வலிய எலும்புச் சோற்றில் இருந்து பிறந்த இரத்த அணுக்களால இரத்தம் வளமாக மாறுகிறது. அது, அதன் பணியை சிறப்புடன் இயக்க, உடல் தெம்புடன் உலவுகிறது. தீராத சுறுசுறுப்புடன் இயங்குகிறது. சிவப்பு அணுக்கள் சிறப்பான பிராண வாயுவைப் பெற்றுக் கொண்டதும் சிலிர்த்தெழுந்து பணியாற்றுகின்றன. இதனால் இரத்த ஓட்டம் விரிவுபடுகிறது விரைவு பெறுகின்றது.

இதன் பயன் என்னவென்றால், உடலின் உள்ளே அடிக்கடி கூடிவிடும் கழிவுப் பொருட்கள் உடனடியாக வெளியேற்றப்படுகின்றன. தசைகள் இரத்தத்தைத் தேவையானபடி பெறுவதற்காக இதயமும் இணைந்து துடித்தெழுந்து வேலை செய்கிறது. இவ்வாறு உழைக்கும் உடல் தழைப்பது மட்டுமல்லாமல், தூய்மையடைந்து, நோயைக் களைந்து,