உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 ஒட்டப் போட்டியை சீயஸ் கடவுளின் மனைவியான ஹீரா என்பவளின் பெயரிலே நடத்தி வந்தார்கள் . முதலில் இளவரசியின் தோழிகளே அந்தப் பந்தயங் களில் பங்கு பெற்றனர். அந்தப் போட்டிக்கு வரும் பார்வையாளர்களும் அவர்களே. அதற்குப் பிறகு கிரேக்கம் முழுமையும் உள்ள ஆர்வமுள்ள பெண்களும் பங்கு பெறலாம் என்று விதி விரிவடைந்தது. விரும்பாத வர்கள் வேடிக்கைப் பார்க்கலாம். மகிழலாம். பங்கு பெற்றாக வேண்டும் என்ற வற்புறுத்தல் இல்லை. கட்டாயமும் இல்லை.

பெண்கள் பந்தயப் போட்டியும், ஆண்கள் பந்தயப் போட்டியைப் போலவே நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடை பெற்றது. அதில் முதன் முதலில் 525 அடி தூரம் ஒடும் ஒட்டப் பந்தயம் தான் இடம் பெற்று இருந்தது.

ஆண்கள் பிறந்த மேனியாகப் போட்டிகளில் பங்கு கொண்டு ஓடினார்கள் என்றால், பெண்களும் திறந்த மேனியாகவே போட்டியிட்டிருக்கின்றனர். அதாவது, இடுப்பில் தொடங்கி முழங்கால் வரை தொங்கும் (அரை பாவாடை) ஆடை அணிந்து கொண்டு, இடுப் பிற்கு மேல் பிறந்த மேனியாகவே ஓடினர்.

காலில் எந்தவிதக் காலணியும் அணியாது, தோளில் இருபுறமும் கூந்தல் அவிழ்ந்து புரளும் கோலத்துடன், வெறுங்காலுடன் ஒடினர். இது போன்ற நிகழ்ச்சி சுமார் கி. மு. 500ஆம் ஆண்டு நடைபெற்றது என்று சரித்திரம் குறிப்பு ஒன்று கூறுகிறது.