பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
72

மீண்டும் ஒலிம்பிக் பந்தயம் புத்துயிர் பெற்றது. என்ருலும் பெண்களுக்கான போட்டிகள் தோன்ற வில்லை. இந்தக் குறையானது இருபத்தி ஐந்தாண்டுகள் தொடர்ந்தன.

பிரான்சு நாட்டிலே இந்தக் குறை பற்றிய பிரச்சினை பீறிட்டெழுந்தது. வீறுகொண்டு மலைந்தது. இறுதியில் கோரிக்கை வெற்றி அடைந்தது. சீரிய வழி திறந்தது. 1922ஆம் ஆண்டு பாரீசில் கடந்த ஒலிம்பிக் போட்டியில் எட்டுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பெண் வீராங்கனைகள் போட்டியிட்டனர்.

இன்று நூற்றுக்கு மேற்பட்ட காடுகளில் இருந்து வீராங்கனைகள் வருகின்றனர். போட்டியிடுகின்றனர். அவர்கள் ஏற்படுத்துகின்ற சாதனை, ஆண்களுக்கும் இணையானவை போலவே இருக்கின்றன. விளையாட்டுக்களில் ஈடுபட்டால் பெண்மையழியும், ஆண்மை மேலோங்கும், அடக்கமில்லாமை வளரும் என்ற ஒரு பத்தாம் பசலித்தனமான வெறுங் கொள்கை காடெங்கும் பரவி இருப்பதால் வளர்ச்சி குன்றியது, என்ருலும், இன்று விளையாட்டு ஆர்வம் புதிய வெள்ள மாகப் பெருக்கெடுத்துப் புறப்பட்டிருக்கிறது.

மலையேற்றமா, மல்யுத்தமா, வி ண் வெளி ப் பயணமா, அலைகடலில் எதிர் நீச்சலா என்ற அத்தனைத் துறையிலும், பங்கு பெறும் பெண்ணினம் இன்று விளையாடாத விளையாட்டுக்களே இல்லை என்ற அளவுக்கு, அத்தனை விளையாட்டுக்களையும் விளையாடி மகிழ்கின்றது.