உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
75

தலையாய கடமையாகக் கொண்டு விளங்குகிறது. கெற்களமானது நெருங்கிக் கலந்து கிறைந்திருக்கும். பதர்களை விலக்கிவிட்டு, கெல்மணிகளைக் குவிக்கும் கேரிய இடமாகக் காட்சி அளிக்கிறது.

ஆடுகளம் எதனை எவ்வாறு, எப்படிச் செய்கிறது என்ருல், அறிவினை அளிக்கின்ற, சுகமான வாழ்வினை விளக்கின்ற, சோம்பல் என்னும் பகையை ஒழித்து, நோய் என்னும் பதரை விலக்கி, கிம்மதி என்னும் நெல்மணிகளைத் தனித்தெடுத்துத் தரும் இனிய நிலமாக ாமக்கு இருக்கிறது.

அகப் பகையை அழிக்கும் ஆடுகளம் வாழ்வுக்குப் பகையான சோம்பலை நீக்குவதுடன், வழிநடைக்குப் புறம்பான புன்முறைகளையும், பொல்லாச் செயல்களையும் போக்கி, துன்ப நினைவுகளைக் களைக் தெறிந்து, இன்ப நினைவாகும் இதயத்தை வளர்த்துவிடு கிறது ஆடுகளம்.

அற்புதமாக ஆடுகளம் என்று பெயர் பெற்றிருக்கும். விளையாட்டிடம், நமக்கு எல்லா அனுபவங்களையும் அள்ளித் தருகின்ற ஆன்ற கலைக் கூடமாகத் தான் இருக்கிறது.

‘என்னிடம் ஐம்பது குழந்தைகளைத் தாருங்கள் இந்த ஆடுகளத்திற்குள்ளேயே அவாகளே வளர்த்து அற்புத அறிஞர்களாக, அருமையான குடிமக்களாக ஆக்கிக் காட்டுகிறேன்’ என்று சவால் விடுவதுபோல் கூறினர் மேல காட்டறிஞர் ஒருவர்.

பிரிட்டன் நடத்திய போர்க்களங்களில் எல்லாம் பிரிட்டன் பெற்ற ஈடில்லா வெற்றிக்குக் காரணமாய்