பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



                                                        78

என்று நன்மை தீமை உணர்ந்து செயல்பட வைக்கின்ற நீதிமன்றமாக ஆடுகளம் இருக்கிறது.

'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்கிருேம். 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்கிருேம். இதனை சொல்லால் மட்டுமே பேசி வீணுக்காமல், செயலால் ஒன்றுபடும் அரிய செயற்கூடமாக ஆடுகளம் விளங்கு கிறது.

கலங்கரை விளக்கம் இவ்வாறு மனித குலத்திற்கு மறையாத கலங்கரை விளக்கமான ஆடுகளத்தில் இறங்கி விளையாடத் தொடங்கியவன் உள்ளம் எல்லாம், சுற்றுப்புற சூழ் நிலையினை மறந்து, துறந்து, விளையாட்டை மட்டுமே சிக்கெனக் கெளவிப் பிடித்துக் கொள்கிறது.

உணர்வுகள் அந்த ஆட்டத்துடன் ஒன்றிப்போய் விடவே, நினைவுகள் விளையாட்டில பெறும் இன்பம் ஒன்றையே எண்ணி மகிழ்கின்றன. அதற்கேற்ற சூழ்நிலையைத் துரண்டுகின்றன. துாண்ட இயலாத கிலையில் வேறு சுகமான இடம் நோக்கித் தாண்டு கின்றன.

தாண்டவும் முடியாத பொழுது. துணையாக ஆடுவோன் உதவியை வேண்டுகின்றன. இதனல் யாருக்கு என்ன லாபம்? இனியதை நினைக்கவும், பிறரிடம் இருந்து பெற்றுக் கொள்ளவும், பிறருக்கு கொடுக்கவும் போன்ற 'கொண்டும் கொடுத்தும்' வளரும் வாழ்வுப் பெருவழியை எளிதாக ஆடுகளம் கற்றுத் தந்துவிடுகிறது.