பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
91


பந்தயத்தில் பங்கு பெறும் வீரர்கள் ஒடுமிடம் கோக்கிக் குழுமுகின்றனர். கூடி நிற்கிற்கின்றனர். ஒடத் தொடங்கும் ஆரம்பக் கோட்டிலே, வீர நினைவுடன் வந்து பந்தயக் குதிரைபோல் செம்மாந்து நிற்கிற்கின்றனர்.

அவர்களின் நெஞ்சமெல்லாம் ஒரே நோக்கம். ஒரே இலட்சியம். ஆமாம் முதலாவதாக ஓடிவர வேண்டும். உன்னத வெற்றியைப் பெறவேண்டும் என்பதே அது.

இந்த நோக்கம் வெற்றிபெற எத்தனை மாதங்கள், எத்தனையோ ஆண்டுகள் அவர்கள் உழைத்திருக் கின்ருர்கள் எளபது அவர்களின் உடல் அமைப்பி லிருந்தும், கடக்கும் இயக்கத்திலிருந்தும் மக்கள் யூகித் துக் கொண்டு விடுகின்ருர்கள்.

தரமான உடலைப் பாதுகாத்து, திறமாக வைத்து அதிலே திறன் நுணுக்கங்களைப் பதித்து வைத்துக் கற்றுத் தெளிவாக்கிக் கொண்டல்லவா மைதானத் துள்ளே வந்திருக்கின்றார்கள்.

இதோ தொங்கிவிட்டது !

வீரர்களை ஒடவிடும் அதிகாரி, ஓங்கிய குரலில் ©(Uj. சில விதிகளைக் கூறுகிருர். அவரவர் அவரவர்க் குரிய பாதையில்தான் ஓடவேண்டும். முன்னேறிப் போக வேண்டுமென்ருல். வலப்புறமாகத்தான் க ட க் க வேண்டும். அவர்கள் கடக்கும்பொழுது அடுத்தவர்மீது, மோதவோ, இடிக்கவோ கூடாது.

இவ்வாறு ஆரம்பத்தில் விதி முறைகளை அள்ளி வீசி, அவர்களை ஒடச் செய்கின் ருர், அதிகாரி ஒடுகின்றவர்களும் விதிகளை ஒழுங்காகப் பின்பற்று.