உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
98

29 அடி இரண்டரை அங்குலம் தாண்டிய பாப்பீமனும் ஒரு நீக்ரோதான்.- உயரத் தாண்டும் போட்டியில் 7 அடிக்கு மேல் முதன் முதலாகத் தாண்டிய சாதனையை உண் டாக்கியவர் ஜான் தாமஸ் என்பவர். தடை தாண்டும் போட்டி, குண்டு எறியும் போட்டி, பத்து அம்சப் போட்டி போன்றவைகளில் நீக்ரோ வீரர்கள்தான் வெற்றி பெற்று ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர்.

வில்மா ருடால்ப் என்ற அமெரிக்க நீக்ரோப் பெண்ணின் அளப்பரிய அருஞ்சாதனையை அகில உலகமே வியந்து போற்றியதாகும்.

நீக்ரோக்களால் எப்படி கன்ருக ஓட முடிகிறது? என்று உலகமே கேள்விக் குறியில் உருண்டபொழுது, ஆராய்ச்சியாளர்கள் பலர், நீக்ரோக்களின் உட லமைப்பைப் பற்றியும், இயற்கை தந்த சிறப்பைப் பற்றியும் தீவிர சிந்தனையுடன் ஆழ்ந்த ஆராய்ச்சியில் தங்கள் கவனத்தைச் செலுத்தி வந்தனர்.

பரம்பரையாக வரும் பலம் மத்திய ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் வசிக்கும் நீக்ரோக்களில் பலர் ஆறு, ஆறரை அடி உயரமான வேலிகளை, தடைகளை, வெறுங் காலால் அலட்சியமாகத் தாண்டிக் குதித்துச் செல்வார் களாம். வடு சி என்னும் இனத்தைச் சேர்ந்த நீக்ரோக்கள் தரைக்கு மேலே மூன்று அல்லது நான்கு அங்குல உயர மண் மேட்டினை அமைத்துக் கொண்டு எட்டு அடிக்குமேல் மிகச் சாதாரணமாகத் தாண்டுகின்றனர் என்பதை நேரில் கண்டு வியந்து தன் சொந்த