பக்கம்:விஷக்கோப்பை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

விஷக்கோப்பை


I00 விஷக்கோப்பை

நீங்கள் அதிகமாய் பேசக்கூடாதாம். பேசினால் உடலில் வெப்பம்மேலிட்டு அந்த நஞ்சின் வேகத்தைத் தடுக்குமாம். வேகம் தடுக்கப்பட்டால் இ ற ப் பு விரைவில் உண்டாகாமல் இரண்டு மூன்று முறை விஷம் கொடுக்க வேண்டி வருமாம் என்ருர். சாக்ர : அவன் கிடக்கட்டும். எத்தனை தரம் கொடுக்க வேண்டுமோ அத்தனை தரம் கொடுக்கச் சொல்லுங்கள் குடிப்பது என்று தீர்மானித்த பிறகு எவ்வளவுதான் குடித்தால் என்ன. நான் எப்போதும் பகுத்தறிவைத் துணையாகக் கொண்டே நடக்க வேண்டியவன். நான் இப்படி யோசித்துச் சிறந்தது எது என்று எனக்குத் தோன்றுகிறதோ, அதன்படியே நடப்பவன் நான். இப்போது அதைச் சோதிக்க இந்த வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. இது வரை எந்த லட்சியங்களை மதித்து வந்தேனே அவற்றை எப்படி மறுப்பது. அவற்றைவிடச் சிறந்த லட்சியங்களை நாம் கண்டுபிடிக்க முடியாதிருக்கும்வரை அவற்றை எப்படி மறுக்க முடியும்? அது நடக்க முடியாத காரியம். பலர் கூடி சிறைவாசம் அளிப்பது, குழந்தை களைப் பயமுறுத்துவதுபோல் மருட்டுவது, இப்படி எல்லாம் செய்தாலும் கூட அது சாத்தியமில்லை. நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்ருல், அதற்குச் சரியான வழி என்ன ? நீங்கள் பலருடைய கருத்துக்களையும் கவனிக்க வேண்டுமென்கிறீர்களே, சிலர் சொல்வதை மதித்து நடக்க வேண்டும். மற்றவர் சொல்வதைக் கவனிக்க வேண்டாம் என்று பேசிக் கொண்டிருந்தோமே அந்தப் பழைய வாதத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/105&oldid=1331488" இலிருந்து மீள்விக்கப்பட்டது