பக்கம்:விஷக்கோப்பை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

111


சி. பி. சிற்றரசு *jall பற்றியும் உங்கள் குடும்பங்களைப்பற்றியும் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டுமென்று நான் சொல்லாமலே நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். இன்று நாம் பேசிய கருத்துக்களையும் இதுவரை நாம் பேசிய கருத்துக்களையும் மறந்து நான் குறிப் பிட்ட வழியில் நடக்கத் தவறுவீர்களானல், நீங்கள் என் குடும்பத்தைப்பற்றி எ ன க் கு எவ்வளவு வாக்குறுதி கொடுத்தாலும் பயனில்லை. கிரீடோ: நாங்கள் அனைவரும் எங்களால் இயன்ற அளவு செய்கிருேம். தங்களை எந்த முறையில் அடக்கம் செய்ய வேண்டுமென்று பணிக்கிறீர்கள். சாக்ரடீஸ் : உங்கள் எண்ணப்படி செய்யலாம். ஆனல் நான் உங்களுக்கு அகப்படமாட்டேன் (என்று சொல்லிச் சிரித்தார் சாக்ரடீஸ்.) நண்பர்களே! கிரிடோ என்ன சொல்லியும் நம்பமாட்டார். நீங்க ளும் தொடைவிடைகளால் விவாதித்தும், ஒப்பு தலும், மறுப்பும் ஒழுங்காக எடுத்துச் சொல்லியும், இன்னும் சிறிது நேரத்தில் உடலைவிட்டு விடுதலை யடைந்து வெளியே டோய்விடும் சாக்ரடீஸ் என்பவ ஞகிய நான்தான் என்று ஒப்புக்கொள்ளமாட்டார். கொஞ்ச நேரத்தில் கீழே கிடக்கப்போகும் உடலை நான் என்றும், என்னை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கேட்கிரு.ர். என் உடல்தான் இருக்கும். என் ஆவி எங்கே போய்விடும் என்று எவ்வளவு சொல்லியும் அவருக்கு விளங்கவில்லை. அருள்கூர்ந்து அவருக்குச் சொல்லுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/116&oldid=1331499" இலிருந்து மீள்விக்கப்பட்டது