பக்கம்:விஷக்கோப்பை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

113


கி. பி. சிற்றரசு 113 வுடன் குழந்தைகளை அழைத்துவரச் சொன்னர். கூடவே சாந்திபுேவும் மற்றும்பல பெண்களும் மீண்டும் வந்தார்கள். அவர்களுக்குச் சொல்ல வேண்டிய புத்திமதிகளையெல்லாம் சொல்லியனுப்பி விட்டு மீண்டும் நண்பர்கள் இடையில் வந்து உட்கார்ந்தார். அப்போது மாலை நேரம் நெருங்கி விட்டதால் மனக் குமுறலோடு ஒருவரோடொருவர் பேசாமல் துக்க ரேகைகள் படர மெளனமாய் உட்கார்ந்திருந்தார்கள். ஒர் அதிகாரி அவர் முன்னல் வந்து நின்று வணக்கம் செலுத்தி-பெரியோய்! மற்றவர்கள் போல் நீர் செய்யமாட்டீர் என்பது எனக்குத் தெரியும். நான் விஷத்தைக் கொடுத்து அவர்களைக் குடிக்கச் சொன்னல் அவர்கள் என்மேல் சினங்கொண்டு திட்டுவதும் தாக்க வருவதும் வழக்கம். அதிகாரி களுடைய கட்டளையை நான் நிறைவேற்றி வைக்க வேண்டியவனல்லவா? நான் என்ன செய்யக்கூடும். நீர் அவ்விதம் செய்யமாட்டீர்கள். இதுவரையில் இவ்விடம் வந்தவர்கள் எல்லோரையும்விட நீர் அன்பும், பெருந்தன்மையும் நிறைந்தவராயிருக்கின் நீர்கள். என்மேல் நீர் கோபங் கொள்ள மாட்டீர் என எனக்கு நிச்சயமாகத் தெரியும். எனக்குக் கட்டளையிட்டவர்களே இந்தப் பெருங் குற்றத்திற்குப் பதில் சொல்ல வேண்டும். என்னை வாழ்த்தி நான் வந்த வேலையை முடித்துத் தாருங்கள். எ ன் று கண்ணிர் விட்டழுதுகொண்டே நின்ருன். வி-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/118&oldid=1331501" இலிருந்து மீள்விக்கப்பட்டது