உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஷக்கோப்பை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

7


சி.பி. சிற்றரசு 7. கிழிக்கப்பட்ட நாட்டின் எல்லேக் கோடுகளும், புதுப் புது நாடுகளை நமக்குக் காட்டிய கடல் கொந்தளிப்பும், நில நடுக்கமும், எரிமலைக் குமுறலும், எவ்வளவோ - விஞ்ஞானக் கருவிகளும், அரசாங்கமும், அதன் ஆட்சி பீடமும் மணிமுடியும் செங்கோலும் அவைகளின் சட்டங்களும் தோன்றித் தோன்றி மறைந்தன. எனி லும், சாக்ரடீஸ் அன்று தோன்றியவன் இன்றும் எழுத்துருவில் - கருத்துருவில்; தோன்றுகிருன். இவ் வுலகம் முடியும்வரைத் தோன்றுவான். ஏன்? அவன் உலகுக்களித்தது அழியாத அறிவுச் செல்வம். பாரசீக மன்னனுகிய ஜெர்ஜெக்ஸ் என்பவன் கிரேக்க நாட்டைக் கட்டியாள எண்ணி, ஆசியாவும் ஐரோப்பாவும் சந்திக்கும் இடமான பாஸ்பரஸ் நீர் சந்திப்பைப் படகுப் பாலத்தால் ஏழு நாட்கள் இரவு பகலாகக் கடந்து கிரேக்க நாட்டை முற்றுகையிட்ட போது, அப் பாரசீக மன்னனைப் புறங்கண்ட வீர மரபினர் முகாமிலே இருந்து போரிட்ட வீர வேங்கை சாக்ரடீஸ், r x- " . . . ! வாலிபத்தில் ஆர் கேலாஸ் என்ற பண்டிதருடன் ஒரு முறை சாமாஸ் நகருக்குச் சென்று, அந்த நாட்டில் புகழோடு வாழ்ந்து வந்த பேரறிஞர் zeno சீனே என்பவரிடம் எதிர்மறை முகத்தான் சொற்போர் நடத்தும் திறமையைக் கற்றுக் களிப்பெய்திய கல்விக் கடல் - அறிவின் வற்ருத ஊற்று - ஆற்றலின் களஞ்சியம் சாக்ரடீஸ். ஜெகத்தைச் சிந்தனைக்கூடமாக்க எண்ணிய இவன் மேல், "சீரழிக்க வந்தவன், கிரேக்கர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/12&oldid=1331388" இலிருந்து மீள்விக்கப்பட்டது