பக்கம்:விஷக்கோப்பை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

117


சி. பி. சிற்றரசு I 17 ஆகவே, அதிலிருந்து ஒரு துளியும் எடுக்க மாட்டீர் கள், எடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். சாக்ர : அப்பா ! நீ கொஞ்சமும் க வ லே ப் படாதே உனக்குத் தீங்கு ஏற்படுகிற முறையில் நான் ஒன்றும் செய்ய மாட்டேன். நன்மையோ, தீமையோ அது என்னையே சாரட்டும். நான் ஒருவித காணிக்கை யும் செலுத்தாமல் ஆண்டவனைத் தொழலாமல்லவா? அதற்கு அனுமதி உண்டல்லவா ? அதிகாரி : அதை நீர் தாராளமாகச் செய்யலாம். சரி, நன்றி என்று சொல்லி விஷத்தை வாயில் வைத்துக் கடகடவென்று குடித்து விட்டார். அந்த விடிை வரையிலும் எப்படியோ துக்கத்தை அடக்கி வைத்துக்கொண்டிருந்த கிரிடோ முதலான நண்பர் கள் வாய் விட்டுக் கோவென அழுதுவிட்டனர். சாக்ரடீஸ் விஷத்தைக் குடித்து முடித்து விட்டான் என்று வெளியே தெரிந்தவுடன் அவன் மன்னிப்புக் காக வாக்களித்தவர் அனைவருமே புலம்பிக் கொண் டிருந்தனர். விஷத்தைத்தான் குடித்தான் சாகவில்லை என்ற சமாதானம் எள்ளளவும் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கவில்லை. ஏன்! அவனுக்குக் கொடுத்த விஷம் ஒருதுளி இரண்டு துளிகள் அல்ல. ஒரு கோப்பை. அதுவும் எம்லாக் என்ற கொடிய விஷம். கொலைக் குற்றம் செய்து மரண தண்டனை யடைந்தவர்கள் யாரையுமே அந்த கொடிய விஷம் விட்டு வைத்த தில்லையே. நம் அறிஞனையா விட்டு வைக்கப் போகிறது. ஒருக்காலுமில்லே என்று நண்பர்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/122&oldid=1331505" இலிருந்து மீள்விக்கப்பட்டது