உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஷக்கோப்பை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

விஷக்கோப்பை


10 விஷக்கோப்பை

எண்தை அந்த கிரேக்கத்தின் பெருங்குடி மக்களால் ‘டையகோரஸ் அழிக்கப்பட வேண்டியவன்' என்றனர். அந்த கொக்கரிப்பைக் கண்டு பயந்து மிலோஸ் என் னும் தான் வாழ்ந்திருந்த ஊரை விட்டோடி கோரிந்த் என்னும் நகருக்குள் மறைந்தான் டையகோரஸ். டையகோரஸ் உயிரை நேசித்தான். உடலை நேசித்தான். சாக்ரடீஸ் கொள்கையை நேசித்தான், நீதியை நேசித்தான், எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டை நேசித்தான். டையகோரஸ் உயிருக்காகப் போராடினன். சாக்ரடீஸ் வெற்றி வீரன்போல் - நஞ்சையரு ந்தி சாவின் சன்னிதானத்திலே நுழைந்தான். ஆனல் சாக்ரடீஸ் தன் உயிரையும் தன் தாயக மாம் ஏதன்ஸ் நகரத்தில் அதுவும் அதன் சிறைச் சாலையில் தன் நண்பர்கள் புடைசூழ, மலர்ந்த முகத்தோடு கை நடுக்கமில்லாமல் கடும் விஷத்தைக் குடித்துக் கண் முடினன். டையகோரஸ் ஊரைவிட்டே ஒடினன். சாக்ரடீஸ் ஒடவும் இல்லை, ஒளியவும் இல்லை. இந்த இருவருக்குமிடையே இருந்த காலம் மிகக் குறுகியதுதான். டையகோரஸைப் பரிகசித்த மக்கள் சாக்ரடீஸின் பேராற்றலைக் கண்டு திடுக்கிட் டனர். அத்தகு அறிவுக் களஞ்சியமான அப் பெரி யோன் அன்றும் பேசினன். இன்றும் நம்மிடையே பல முறைகளில் பேசிக் கொண்டிருக்கின்றன். 'சாகத் துணியமாட்டான் சாக்ரடீஸ் விண்ணப்பம் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/15&oldid=1331398" இலிருந்து மீள்விக்கப்பட்டது