உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஷக்கோப்பை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

விஷக்கோப்பை


12 விஷக்கோப்பை

நீதியை நிலை நாட்டப் பலிபீடம் நோக்கிச் சென்ற நெஞ்சுரம் படைத்தவன். தன் வாதத்தை ஏதன்ஸ் நீதிமன்றத்தின்முன் நிலை நாட்ட நிற்கிருன். அவனுக் öf了ö历 வழக்கறிஞ்ன் ஒருவன் 500 பக்கங்கள் கொண்ட வாதத்தை ஏந்தி முன்வந்தான். ஆனல், இவன், அவனைப் பேச்விடவில்லை. குற்றவாளிக்காக மற்ருெரு வன் பேசுவது சரி அல்ல. ஆகவே, வேண்டாமென மறுத்து அவனே பேசுகிருன். அவனைவிட மேலாக அன் றும் இன்றும் யார்பேசினர்கள்? ஆகையால் அவனே பேசுகிருன், அதனால், அவன் இன்று நம்மிடையே உயிரோடிருக்கிருன். உண்மை சாக்ரடீஸ் சாகவில்லை. அவன் தாங்கியிருந்த உடல் இல்லை. அவன் சொன்ன உண்மைகளிருக்கின்றன. ஆனல் அவனைக் கொல்லச் சதி செய்து குற்றவாளியாக்கிக் கூண்டில் நிறுத்திக் கொன்றுவிட்ட கொடியவர்களும் இன்று உயிரோ டில்லே சந்திரனில் களங்கமும், சாகரத்தில் புயலும், சோகத்தில் சிரிப்பும் இருப்பதைப்போல, ஏதன்ஸில் இந்தச் சண்டாளர்கள் இருந்தார்கள். . . . . சாகப்போகின்ற ஒருவன், சாகத் துணிந்த ஒருவனே சாகடித்துவிட்டேன் , என்று அற்ப சந்தோஷப்படுகிருன், அதை விளக்கத்தான் அறி வொளி பரப்பிய அண்ணல் சாக்ரடீஸ் பேசுகிருன். 'இறப்பதும் பிறப்பதும் மாற்றமுடியாத நியதி. ஆல்ை, என் வாதங்களை உங்கள் தர்க்கத்தால் மாற்ற முடியுமானல் மாற்றுங்கள் " என்று மார்தட்டிக் கேட்ட சாக்ரடீஸ் முன்பு, செத்தவர்கள் போலானர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/17&oldid=1331400" இலிருந்து மீள்விக்கப்பட்டது