பக்கம்:விஷக்கோப்பை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

விஷக்கோப்பை


14 விஷக்கோப்பை

ஏதன்ஸ் நீதி மன்றத்தில் கம்பீரமாக நின்று தலை நிமிர்ந்து தன்னம்பிக்கையோடு பேசுயது, இதுதான்: நீதி மன்றம் "எழில் கொழிக்கும் ஏதன்ஸ் நகர நீதிமான்களே! இந்த என்னுடைய எழுபத்திரண்டாவது வயதில் முதன்முதலாக இப்போதுதான் நான் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறேன். இதற்குமுன் நான் எப்போதுமே இந்தக் கோலத்தில் நுழைந்ததில்லையாகையால், எந்த விதமான கண்ணியம் வாய்ந்த வார்த்தைகளை இங்கே கையாளவேண்டும் என்பதும் எனக்குப் புதியதாக இருக்கிறது. பழக்கமில்லாத காரணத்தால் நான் ஏதாவது தவருன வார்த்தைகளைப் பயன்படுத்தி விட்டால், நீதி மன்றத்தில் இதுவரை நிற்காத ஒர் ஏழை, அதுவும் பழக்கமில்லாதவன் என்ற காரணத் தால் என்னை உங்கள் காருண்ணிய உள்ளத்தால் மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். என் குழந்தைப் பருவமுதல் இந்த என் வயோதிகப் பருவம்வரை பார்த்தால் நான் வாழ்ந்த இந்த எழுபத்திரண்டு ஆண்டுகள் மிகப் பெரிய காலம் ஆகும். ஆளுல் நித்திய தத்துவத்தோடும், அழிவில் லாத காலத்தோடும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது காலவேகத்தில் அடித்துக்கொண்டு ேபாகு ம் அணுவுக்கு அணு என் வாழ்நாள். . . . . . செழித்தோங்கும் கலக்கோயிலாம் கிரேக்கத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/19&oldid=1331402" இலிருந்து மீள்விக்கப்பட்டது