உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஷக்கோப்பை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

விஷக்கோப்பை


16 w . விஷக்கோப்பை

வேண்டும் என்பதில்ைதான். நீண்ட நாட்களாக என்மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்களுக்கெல்லாம், எனக்களிக்கப்பட்டிருக்கும் இந்தக் குறுகிய காலத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.” х நிரபராதி நிற்கிறேன்! "நடுநிலையறிந்த நகரத்தார்களே ! நண்பர்கள், சுற்றத்தார், வேண்டியவர்கள், வேண்டாதவர்கள், உள் நாட்டார், அயல் நாட்டார், அரசாங்க ஊழியர் கள், அஃதல்லாதார் என்ற பாகுபாடில்லாமல் நியா யத்தை வழங்க வாள்முனையில் உறுதி செய்து கொண்ட உத்தமர்களாகிய உங்கள் முன்னிலையில் நிற்கிறேன். கண்டோர் வியக்கும் கலைக்கோயிலாம் ஏதன்ஸை தலைநகராகக்கொண்ட கிரேக்க நாட்டில் பிறந்ததற்காகப் பெருமைப்படுகிறேன். மற்ற நாடு கள் எல்லாம் மக்களுக்கு எதையெதையோ கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, சிற்பக்கலை, விஞ் ஞானம், சட்டம், சமுக அமைப்பு, அரசியல், ஆராய்ச்சி நீதி, நேர்மை, நட்பு, ஆகியவைகளைப்பற்றியே தன் மக்களுக்குப் போதித்து வந்த ஏதன்ஸ் நீதிமன்றத்தின் முன் குற்றவாளி என்ற பேரால் நிற்கிறேன்" உலகத்தில் முன்றில் இரண்டு பாகத்தை அடக்கி யாண்ட பெர்ஷிய மன்னன் டேரியஸ் என்றவனைப் புறமுதுகிடச் செய்த வீரளும் எர்குலஸ் என்ற ஏந்தலின் முன்னேனை வயோதிகன் நீதிக்காக இரு கையேந்தி நின்று மேலும் பேசுகிருன். . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/21&oldid=1331404" இலிருந்து மீள்விக்கப்பட்டது