பக்கம்:விஷக்கோப்பை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

விஷக்கோப்பை


18 விஷக்கோப்பை

காலத்தில் நம்பிக்கையோடு வாழ்கின்ருன். இந்த நம்பிக்கைதான் தள்ளாத வயதில் தாதி போல் இருந்து உதவுகிறது." ' நெறியுடையோனை, தூயவாழ்வினனை, நம்பிக்கை எனும் மாதேவியே கடத்திச் செல்கின்ருள். வயோதிகத் தில் தாதியாய், வழிநடையில் துணைவியாய் இருக்கு மவள், அலையுறும் ஆத்மாவுக்கு ஆறுதலளிக்கின்ருள்." என்று கூறிய பிண்டார் என்ற நமது கவிஞன் பொற் கவிதையை இங்கே நினைவு படுத்துகிறேன். ஆகவே நான் எந்தவித அபாயங்களுக்கும் அநியாயங்களுக்கும் சோர்ந்து விடுவதில்லை. ஏனெனில் இதுவரை நான் யாருக்கும் எவ்விதத் தீங்கும் இழைத்ததில்லை; இழைக்க எண்ணியதும் இல்லை. ஆகவே, என் நிழலே என்னைப் பயங்கரப் படுத்தியதில்லை. ஆதலால் பிறர் நிழலைப் பார்த்து நான் பயப்படத் தேவையில்லாமல் போய்விட்டது. குற்றச்சாட்டு என்மேல் என் நண்பர் மெலிடஸ் அவர்கள் சுமத் திய குற்றங்களில் முதன்மையானது, நான் சாமர்த்திய மான பேச்சாளி, என்பது. அதுதான் அவர் சொல்லிய பொய்கள் எல்லாவற்றிலும் மிகப் பெரிய பொய், அப்படியே அவர் குற்றச்சாட்டு உண்மையாயிருக்கு மாளுல் அந்தப் பேச்சின் வண்மையில் நீங்கள் யாரும் மயங்கிக் கட்டுப்பட்டுப் போகக் கூடாதென்பதே என் முதல் வேண்டுகோள். அறிந்தோ அறியாமலோ என் எதிரி ஒரு உண்மையை ஒப்புக்கொண்டதற்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/23&oldid=1331406" இலிருந்து மீள்விக்கப்பட்டது