பக்கம்:விஷக்கோப்பை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

25


சி. பி. சிற்றரசு 25 கொள்ளுகிற வயது 10 என்று வைத்தால் 40 வய துடைய மனித்னகும் வரையிலாவது நான் சொல்லி யதை அவன் கேட்கும் வயதடைந்திருப்பான். என் னுடைய இந்த முப்பதாண்டுப் பிரசாரத்தை ஏதன்ஸ் நகரம் எப்படிக் கேட்டு சகித்துக்கொண்டு வாளா விருந்ததோ, தெரியவில்லை. அல்லது மு ப் ப து ஆண்டுகளில் வராத ஆபத்து இப்போது என்ன வந்து விட்டதோ, அதுவும் எனக்குப் புரியவில்லை. இவ் வளவு நாட்கள் சகித்துக்கொண்டிருந்தது, தனி மனிதன் சுதந்திரத்தைத் தட்டிப் பறிக்கக் கூடா தென்ற தயாள சிந்தனையினலா, என்பதும் எனக்குப் புலப்படவில்லை. அல்லது எனக்களித்த சுதந்திரம் முதலில் இளமையோடிருந்ததால் சரியாக வேலை செய்து, இப்போது அந்த சுதந்திரத்திற்கு நாளாய் விட்டதால் கிழடு த ட் டி ப் போய்விட்டதோ என்னவோ தெரியவில்லை. ஆளுல் வாதி இப்போது காட்டும் காரணங்கள், எந்த ஆண்டவனே மக்கள் நம்புகிருர்களோ, எந்தச் சக்தியின்பேரால் உயி ரினங்கள் இயங்குகின்றனவோ, அதற்கப்பாலான ஒன்றைக் கற்பித்து, இளைஞர்களை நம்பும்படிச் செய் தேன் என்பது. இந்த இடத்தில் எதிரி தன்னேயு மறியாமல் ஒர் உண்மையை வெளியிட்டு விடுகிரு.ர். அதாவது, எல்லோரும் நம்பும் ஒன்றுக்கப்பாலானதை நான் நம்புவதோடல்லாமல், இளைஞர்களை நம்பும்படி செய்தேன் என்பது. அப்படியால்ை எதையோ ஒன்றை நம்புகிற ஒருவன், எப்படி நாத்திகன் ஆக முடியும் என்பதை நீதிமான்களாகிய நீங்களே தீர்மானிக்கவேண்டும். அ ந் த க் குற்றச்சாட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/30&oldid=1331413" இலிருந்து மீள்விக்கப்பட்டது