பக்கம்:விஷக்கோப்பை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

விஷக்கோப்பை


40 விஷக்கோப்பை

வாக்குகளும் பதிவாய் விட்டன. அவைகள் எண்ணப் பட்டன. (220 பேர்கள் சாக்ரடீசை மன்னித்துவிட வேண்டுமென்றும், 281 பேர்கள், மரண தண்டனை யளிக்க வேண்டுமென்றும் தங்கள் வாக்குகளை வழங்கி யிருந்தனர்) 61 ஓட்டுகள் அறிஞர் உயிரைக் குடிக்க முன்வந்துவிட்டன. ஒரு பக்கம் எக்காளம், மற்ருேர் பக்கம் ஏக்கம், கருத்துள்ளோர் கவலைக் கண்ணிர் சொரிந்தனர், அடக்கமற்ற அநியாயக்காரர்கள் ஆனந்தக் கண்ணிர் சொரிந்தனர். பெருமூச்சுக் கிடையே பெட்டிகளைத் து க் கி ச் சென்றனர் பணியாட்கள். அவன்பால் அன்புள்ளம் கொண்டவர்கள் அனை வருமே, அவன் மன்னிப்புக்காக வாக்களித்தவர்கள், ஆனல் அவர்கள் தோல்வியுற்றனர். அதில் குறிப்பிட வேண்டியவன் பிளாட்டோ. கண்ணிர் கரைபுரண் டோடின. மெய் சிலிர்த்தது. வேர்த்துவிட்டது அவன் உடல். கைகால்கள் நடுக்கங்கண்டுவிட்டன. துக்கம் நெஞ்சைத் தூக்கி தூக்கி எறிந்தது. இருப்புக் கொள்ளவில்லை அவனுக்கு. இரு கண்கள் நீர்த் தேக்கமாய்விட்டன. உலக மேதை, வாதகேசரி, அறி வின் வற்ருத ஊற்று, சொற்செல்வன் சாக்ரடீஸ்மேல் வழக்குத் தொடுத்த மெலிடஸ் என்ற மாபாதகன் அவனுக்கு விரோதியாகத் தோன்றவில்லை. 61 ஓட்டுக் களையே தீராத பகைவர்களாக எண்ணினன். அதி லும் 31 ஒட்டுக்களைத்தான் மூர்க்கத்தனமான எதிரிக ளாகக் கருதினன். ஏனென்ருல், 31 ஓட்டுகள், இது வரை சாதகமாகக் கிடைத்த 220 ஒட்டுக்களோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/45&oldid=1331428" இலிருந்து மீள்விக்கப்பட்டது