உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஷக்கோப்பை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

விஷக்கோப்பை


50 விஷக்கோப்பை

முயற்சியில், நீதியை நிலைநாட்டிவிட்டதாக எண்ணி நீங்கள் தற்காலிக வெற்றி பெற்றுவிட்டீர்கள். மனக் கசப்புக்கும் மாளாத சூழ்ச்சிக்கும் இடையே வாழ் வதைவிட மறிப்பதேமேல். ஆகவே நான் சுத்தவீரன் என்ற முறையில் என் உயிரையே உங்கள் வெற்றிக் காகப் பரிசளிக்கின்றேன். . சட்டத்தின் நெருக்கடியிலிருந்தும், சண்டை முனையிலிருந்தும் எவ்வளவோ பேர்கள் தப்பியோட எண்ணுகிருர்கள். சட்டத்திலிருந்து த ப் பி க்க எண்ணும் ஒருவன் பொய் சத்தியம் செய்து பிழைத்து விடுகிருன். சண்டை முனையிலிருந்து த ப் பி க்க எண்ணும் ஒரு போர்வீரன் ஆயுதங்களைக் கீழே எறிந்துவிட்டு எதிரியின் காலடியில் விழுந்து சரணு கதியடைந்து உயிர்ப்பிச்சைக் கேட்டு ஒடிப் போகிருன். இன்னும் சிலர் அரசாங்க நடவடிக்கையில் இருந்து தப்பித்துக்கொள்ளத் தலைமறைவாய்த் திரிந்துக் கொண்டிருக்கின்ருர்கள். ஒவ்வொரு அபாயங்களி லிருந்தும் மனிதன் தப்புவதற்காக எவ்வளவோ உபாயங்களைக் கையாளுகிருன்; ஆல்ை என் அருமை நண்பர்களே! மரணத்திலிருந்து தப்புவதைவிட அபாயத்திலிருந்து தப்புவது மகா கொடியதாகும். என் எதிரிகள் தீமையிலிருந்து தப்பி விட்டார்கள். ஆனல், நான் உண்மையிலிருந்தும் தப்ப முடியவில்லை. எனக்கு மரண தண்டனை, அவர்களுக்கு விடுதலை. கர்ப்ப வேதனேயில் மகப்பேற்றை எளிதாகச் செய்யவல்ல, தாயைப்போல, பிறர் மனதில் உதிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/55&oldid=1331438" இலிருந்து மீள்விக்கப்பட்டது