உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஷக்கோப்பை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

விஷக்கோப்பை


52 விஷக்கோப்பை

கொண்ட விபரீதப் போக்கில் பலர் மாண்டிருக்கின்ற னர். இவர்களெல்லாம் முன் அறிவிப்பில்லாமல் செத்தவர்கள். அதிலும் நான் மேம்பட்டவன். ஏனெனில் நான் எப்போது சாகவேண்டும் என்பதை முன்கூட்டியே அறிவித்திருக்கின்றீர்கள். இது, மற்ற யாருக்குங் கிடைக்காத பரிசல்லவா? அதற்குள் எனக்கு, ஏதாவது ஆசாபாசங்கள் இருந்தால், நிறை வேற்றிக்கொள்ளலா மல்லவா? ஆகவே, ஒருவனுக்கு ஆயுள் 100 ஆண்டுகள் எனக் கணித்து, ஒருவரும் அந்த எல்லையை அடையவில்லையே என்று கவலைப்படு வதைவிட, பிறந்தது முதல் இறக்கும் வரையுள்ள நாட்கள்தான், அவன் ஆயுள், என்று கணித்தோமே யாளுல் நன்மை பயக்கும், என்று கருதுகிறேன். ஆகவே ஒரு நீதிமன்றத்தின் கடைசி எல்லே யாகிய மரண தண்டனையை எனக்களித்த உங்கள் மனச்சாந்தியைப் பரிகாசம் செய்யப்போகும் நாள், நான் இறக்கும் நாள் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பயங்கரச் செய்கை உங்கள் வாழ்நாளைக் கணக்கெடுக்கக் காத்துக்கொண் டிருக்கின்றது. முடிவு முற்றிலும் மாருனதாக இருக் கும். ஆல்ை, நீங்கள் இன்னும் அழைத்து விசாரிக்க வேண்டியவர்கள் என் தத்துவத்தின் நிழலில் ஒளிந்து கொண்டிருக்கின்ருர்கள். அவர்களை நீங்கள் எளி தில் அடையாளங் கண்டுகொள்ள முடியாது. அவர்கள் என்னைப்போலவே இளகிய மனம் உடைய வர்களாயிராமல் கொஞ்சம் கடினமான மனமுடைய வர்களாயிருப்பார்கள். அவர்களைக் க ண் டா ல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/57&oldid=1331440" இலிருந்து மீள்விக்கப்பட்டது