பக்கம்:விஷக்கோப்பை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு g மெய்யறிவென நம்பிய மக்களின் நுண்ணறிவைத் தூண்ட ஒரு மெய்ஞானி தோன்றுவான் என்று எண் ளுத காலம். தோன்றின்ை ஒரு வீரன். அறிஞன், தற்கவாதி, தக்கோரிவரெனவும், தகவிலாரிவரென வும் தரம் பிரித்துக் காட்டிய தன்னுணர்வாளன் Gதான்றியே விட்டான். ஏதன்ஸை எல்லா முறைகளிலேயும் மேம்படச் செய்த், பெரிக்லஸ் என்ற பேரரசன் அநியாயமான பழிகள் சுமத்தப்பட்டுச் சிறையில் வாடி, அந்த இருட்டு குகையிலேயே மடிந்துவிட்ட காலம், இளமையில் இயற்கை நூல், பெளதிகம், வான நூல், நிலநூல் ஆகியவைகளைப்பற்றி நன்கு படித் துணர்ந்து, முதல் மனேவி இறக்கத், தனது 40-வது வயதில் இரண்டாவது மணம் செய்துக்கொண்டு, பிலிப்போனேஷிய யுத்தத்தில் காலாட்படையில் போர் வீரளுகச் சேர்ந்து, போட்டிடோ என்ற ரணகளத்தில் தன் படைத் தலைவனுடைய தலையைக் காப்பாற்றி, அதற்குச் சன்மானமாகத் தான் பெறவேண்டிய இராணுவ கெளரவத்தைத் தன் படைத் தலைவன் ஆல்கிபிடியாஸ் என்பவனே அடையும்படிச் செய்த பொதுநலவாதி, கருணை வள்ளல். . . டேலியம், அம்பிபோலீஸ் என்ற இரு பயங்கரமான போர்க்களத்தில், தன் நாட்டுப் போர்வீரர்கள் சலித் துப் பின் வாங்கியபோது, உற்சாகமூட்டி வெற்றி கண்ட சுத்த வீரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/8&oldid=910719" இலிருந்து மீள்விக்கப்பட்டது