பக்கம்:விஷக்கோப்பை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

75


சி. பி. சிற்றரசு 75 தங்களுக்கும் எனக்கும் நண்பர்களான, சிம்மியாஸ், திபெஸ் என்ற இருவரும் இந்த வேலையைச் செய்து முடிக்கத் தயாராயுள்ளனர். வெளி நாட்டில் என்ன செய்வதென்று அஞ்சவேண்டாம். அங்கே மலர் மாலைகளோடு பலர் தங்களை வரவேற்கக் காத்துக் கொண்டிருக்கின்றனர். தெசேலை என்ற ஊருக்குப் போகத் தாங்கள் எண்ணினல் அங்கே தங்களுக்கு எந்தவிதத் தொல்லையுமில்லாமல் காப்பாற்ற ஆட்கள் உண்டு. - மேலும் தாங்கள் ஒர் தவற்றைச் செய்கிறீர்கள். காப்பாற்றப்பட வேண்டிய உயிரை இழக்கச் சித்த மாய்விட்டீர்கள். யார் தங்களைக் கொன்றுவிடத் திட்டமிட்டு நாகரிகச் சதி செய்து வெற்றி பெற்ருர் களோ, அவர்களிடம் இரக்கங்காட்டிவிட்டீர்கள். மற்ருென்று; உங்கள் குழந்தைகளை நிர்க்கதியாக்கு கின்றீர்கள். நீங்கள் நினைத்தால் அவர்களைக் கல்வி யறிவுடையவ்ர்களாக்க முடியும், அளுதைக் குழந்தை களின் நிலைக்கு அக்குழந்தைகளைக் கொண்டு வரா தீர்கள். வாழ்நாள் எல்லாம் நீங்கள் பேசிவந்த அறம் ஒழுக்கம் என்பவைகளைப்பற்றி எண்ணிப் பாருங்கள். நான் என்னைப் பொறுத்த வரையிலும் எதிரிகளைக் கொழுக்கவிட்டுவிட்டுத் தாங்கள் உயிர் விடத் துணிந்ததை மிகமிக அவமானமாகக் கருது கிறேன். இவை எல்லாம் நம்முடைய கோழைத் தனத்தினால் நடந்ததாகவே நான் கருதுகின்றேன். தப்பித்துக் கொள்ள நல்ல வாய்ப்பிருந்தும், நாங்கள் தங்களைத் தப்பிக்கச் செய்யாதது, அல்லது தாங்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/80&oldid=1331463" இலிருந்து மீள்விக்கப்பட்டது