பக்கம்:விஷக்கோப்பை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

79


சி. பி. சிற்றரசு 7g குரலுக்கு ஆணித்தரமான பதிலளித்த உமது அஞ்சா நெஞ்சத்தோடு ஆவியையும் சேர்த்துக் குடிக்க எண்ணியதோ, எந்த அநீதியெனும் நெடும் பயணத் தில் அது காட்டும் ஆசை வார்த்தைகள் நிரம்பிய வேடிக்கைக் கதைகளை நம்பிச் சென்ற பல்லாயிர இளைஞர்களைப்பார்த்து அ வ் வழி அபாயமென எச்சரித்து, அறவொளியாம் நல்வழி காட்டிய நல்லவ ராகிய உம்மை நஞ்சுண்ணப் பணித்ததோ அந்த அநீதியை இருக்கும் இடம் தெரியாமல் ஒட்ட வேண்டும். அதற்கு உம்மைத் தவிர வேறுயாரையுங் காணுேம். மற்றவர்களெல்லாம் ஆட்டிடையனை நம்பி மந்தையில் சென்று ஒநாயின் இரைச்சலைக் கேட்டுப் பயந்து திரும்பிவிடும் ஆட்டுக்குட்டிகளைப் போன்றவர்கள். ஆகவே உம் போன்ற வீரர்கள் தேவை. நீர் அழிந்தால் உமது இடம் என்றென்றும் நிரப்பப்படமாட்டாது. வேறு யாருக்கும் இந்தப் பேராற்றலில்லை. நான் தங்கள்மேல் கொண்ட அன்பினுல் மாத்திரமல்ல. நமது தாயகமாம் கிரேக் கத்தின் நீதி தவறிய இந்தச் செய்கை என்றென்றும் உலக வரலாற்றிலே இடம் பெறக்கூடாது. இந்தக் கொடுமை நமது ஏதென்சுக்கு என்றும் மறைக்க முடி யாத அவமானச் சின்னம். வரலாற்றை வரை யறுக்கத் தொடங்கும் சரித்திரத் தந்தைகள் நமது நாட்டில் பிறந்தவர்களாயிருந்தாலும் வே ற் று நாட்டவராயிருந்தாலும் இந்தக் கோர நிகழ்ச்சிக்கு விதிவிலக்களிப்பார்களா? அறிவின் சிகரமே! மாற்ரு. ரைப் புறங்காணச் செய்த வீரமரபினர் நீதியைப் புறங்காணச் செய்தனர் என்ற தீராப்பழி என் தாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/84&oldid=1331467" இலிருந்து மீள்விக்கப்பட்டது